கோவை:உலக இருதய தினத்தை முன்னிட்டு, குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை உலக சாதனை நிகழ்த்தியுள்ளது.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை மற்றும் செவிலியர் பயிற்சி கல்லுாரி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒரே நேரத்தில் அதிக நபர்கள் சேர்ந்து ஆரோக்கியமான இதயம் போன்று கை அசைவினை வெளிப்படுத்தி, உலக சாதனை மற்றும் ஆசிய புத்தக சாதனை நிகழ்த்தியுள்ளனர். கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி மற்றும் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள், செவிலியர் கல்லுாரி மாணவிகள் பங்கேற்றனர். இதில், இன்டர்வென்ஷனல் கார்டி யாலஜி துறை தலைவர் ராஜ்பால், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடுவர் விவேக், கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை துறை தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.