கார்களில் 'ஏர் பேக்' கட்டாயம் அடுத்தாண்டுக்கு ஒத்தி வைப்பு

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: பயணியர் கார்களில் ஆறு 'ஏர் பேக்' என்ற பாதுகாப்பு வசதியை கட்டாயமாக்கும் திட்டம், ஒரு ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகளவில் இயங்கும் வாகனங்களில் 1 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது. அதே நேரத்தில் உலகளவில் நடக்கும் விபத்துகளில், 10 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது.தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விபரங்களின்படி, 2021ல்
கார்கள் , ஏர் பேக் ,  கட்டாயம்,  வழக்கு,  ஒத்தி வைப்பு

புதுடில்லி: பயணியர் கார்களில் ஆறு 'ஏர் பேக்' என்ற பாதுகாப்பு வசதியை கட்டாயமாக்கும் திட்டம், ஒரு ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகளவில் இயங்கும் வாகனங்களில் 1 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது. அதே நேரத்தில் உலகளவில் நடக்கும் விபத்துகளில், 10 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது.தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விபரங்களின்படி, 2021ல் மட்டும் சாலை விபத்துகளில், 1.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.latest tamil newsஅதாவது நாளொன்றுக்கு 426 பேர், ஒரு மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.சாலை விபத்துகளின்போது உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கார்களில் பயணம் செய்யும்போது, திடீரென விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பை தடுக்கும் வகையில், அதில் ஏர் பேக் வசதி உள்ளது.உயர்ரக கார்களில், எட்டு ஏர் பேக் வசதி உள்ளது. அதே நேரத்தில் சிறிய கார்களில் தற்போதைக்கு, இரண்டு ஏர் பேக் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்தாண்டு அக்., 1 முதல், சிறிய கார்களிலும், ஆறு ஏர் பேக் வசதியை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என, மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளதாவது:ஆறு ஏர் பேக் வசதியைஏற்படுத்துவதை கட்டாயமாக்கும் திட்டம், அடுத்தாண்டு, அக்., 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.கார்களுக்கான ஏர் பேக் வெளிநாடுகளில் இருந்து வருவதில் உள்ள சிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் துறையினர் சந்தித்து வரும் பொருளாதார பிரச்னை போன்றவற்றை கருத்தில் வைத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில், அனைத்து பயணியரின் உயிரை பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-செப்-202221:43:41 IST Report Abuse
kulandai kannan Three simple steps to reduce road accidents.1. Do not change lanes unnecessarily2. Do not try to overtake other vehicles unless you are sure3. Do not use horn.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-செப்-202222:06:42 IST Report Abuse
NicoleThomsonசரியா சொல்லியிருக்கீங்க...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-செப்-202206:14:33 IST Report Abuse
Kasimani Baskaran விதிகளை மீறும் ஓட்டுனர்களை தண்டனைக்குள்ளாக்க வேண்டும், சாலைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். ஒரு நாள் மழைக்குக்கூட தாங்காத சென்னை சாலைகளை வைத்துக்கொண்டு பாதுகாப்பு, ஏர் பேக் பற்றியெல்லாம் பேசுவது அபத்தம்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-செப்-202203:11:43 IST Report Abuse
NicoleThomson எல்லாம் சரி வெள்ளை லைட் கொண்டு வருகிறேன் என்று LED லைட் கொண்டுவந்தார்கள் , சாலையே தெரியாத அளவிற்கு ஒளிவெள்ளம் , தவறான திசையில் பயணிக்கும் கேடுகெட்ட ட்ரைவர்களால் ஹை பீம் கூட குறைக்க தெரிவதில்லை , அவர்களுக்கு லைசன்ஸ் கொடுத்த அதிகாரிகளை திட்டுவதா ? இல்லை வெள்ளை விளக்க கொண்டு வந்த அரசை திட்டுவதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X