இளம் வல்லுனர்களுக்கு 2 ஆண்டு புத்தாய்வு திட்டம்

Added : செப் 30, 2022 | |
Advertisement
சென்னை:இளம் வல்லுனர்களுக்கு 30 நாட்கள் வகுப்பறை பயிற்சியுடன் கூடிய 2 ஆண்டு புத்தாய்வு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.திறன்மிகு இளைஞர்களின் ஆற்றலையும் திறமையையும் பயன்படுத்தி நிர்வாக முறைகளின் செயல் திறனை மேம்படுத்தி சேவை வழங்குவதே இதன் நோக்கம்.அரசு துறை வல்லுனர்களை வைத்து 30 நாட்கள் பயிற்சி சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரியில்
இளம் வல்லுனர்களுக்கு 2 ஆண்டு புத்தாய்வு திட்டம்

சென்னை:இளம் வல்லுனர்களுக்கு 30 நாட்கள் வகுப்பறை பயிற்சியுடன் கூடிய 2 ஆண்டு புத்தாய்வு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.


திறன்மிகு இளைஞர்களின் ஆற்றலையும் திறமையையும் பயன்படுத்தி நிர்வாக முறைகளின் செயல் திறனை மேம்படுத்தி சேவை வழங்குவதே இதன் நோக்கம்.அரசு துறை வல்லுனர்களை வைத்து 30 நாட்கள் பயிற்சி சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரியில் வழங்கப்படுகிறது.தேர்வான இளம் வல்லுனர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மடிக்கணினி வழங்கி பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். 2 ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித் தொகை 65 ஆயிரம் ரூபாய் பயணச் செலவு அலைபேசி, தரவு பயன்பாடு செலவினத்திற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் கூடுதல் தொகையாக வழங்கப்படும்.


2 ஆண்டு புத்தாய்வு திட்டத்தை நிறைவு செய்வோருக்கு பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் சார்பில் பொதுக் கொள்கை மற்றும் மேலாண்மையில் முதுகலை சான்றிதழ் வழங்கப்படும்.ஏற்கனவே முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச தகுதித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முனைவர் பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பு வழங்கப்படும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X