குரூப் - 4 தேர்வு முடிவுகள் எப்போது

Added : செப் 30, 2022 | |
Advertisement
சென்னை:'குரூப் - 2 தேர்வு முடிவு அடுத்த மாதமும் குரூப் - 4 தேர்வு முடிவு டிசம்பரிலும் வெளியாகும்' என அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.அரசு துறைகளில் காலியாக உள்ள 5208 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 2 முதல் நிலை தேர்வு மே 21ல் நடந்தது. அதன் முடிவுகள் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அதேபோல் 7301 இடங்களை நிரப்புவதற்காக ஜூலை 24ல் நடந்த குரூப் - 4 தேர்வின்

சென்னை:'குரூப் - 2 தேர்வு முடிவு அடுத்த மாதமும் குரூப் - 4 தேர்வு முடிவு டிசம்பரிலும் வெளியாகும்' என அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.


அரசு துறைகளில் காலியாக உள்ள 5208 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 2 முதல் நிலை தேர்வு மே 21ல் நடந்தது. அதன் முடிவுகள் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அதேபோல் 7301 இடங்களை நிரப்புவதற்காக ஜூலை 24ல் நடந்த குரூப் - 4 தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகவிருந்த நிலையில் டிசம்பருக்கு தள்ளி போடப் பட்டுள்ளது.


குற்றவியல் அரசு உதவி வழக்கறிஞர் பதவியில் 50 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு; இன்ஜினியரிங் பணிகளில் 626 காலியிடங்களை நிரப்ப ஜூலை 2ல் நடந்த தேர்வு மற்றும் சிறைத் துறை உளவியலாளர் பணியில் நான்கு காலியிடங்களுக்கு ஆக. 6ல் நடந்த தேர்வுகளின் முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளன.


நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட துறையில் உதவி இயக்குனர் பதவியில் 29 காலியிடங்களுக்கு மே 28ல் தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள் ஜூலையில் அறிவிக்கப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேதிகள் அக்டோபரில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X