ரேஷன் ஆவணங்கள் தணிக்கை செய்ய உத்தரவு

Added : செப் 30, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை:கிராம சபை கூட்டத்தில், ரேஷன் கடை ஆவணங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்துமாறும், புகார்களுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு காணுமாறும் அதிகாரிகளுக்கு, உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன், மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று, தங்கள் மாவட்டத்தில் நடக்க உள்ள கிராமசபை

சென்னை:கிராம சபை கூட்டத்தில், ரேஷன் கடை ஆவணங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்துமாறும், புகார்களுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு காணுமாறும் அதிகாரிகளுக்கு, உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து, உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன், மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று, தங்கள் மாவட்டத்தில் நடக்க உள்ள கிராமசபை கூட்டத்தில், அந்தந்த கிராமங்களில் செயல்படும் ரேஷன் கடைகளின் ஆவணங்களை, சமூக தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.


முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்களின் பட்டியலை, கிராம சபை முன் தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும்.கிராம சபை கூட்டங்களில் பெறப்படும் புகார்களை, ஒரு வாரத்திற்குள் தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சமூக தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்ட சான்று, பெறப்பட்ட புகார் ஆகிய விபரங்களை, கூட்டம் முடிந்த ஐந்து தினங்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



ஊழியர் பதவி உயர்வு


கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் எடையாளர், விற்பனையாளருக்கு தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கும் பணியை, அக்., 6க்குள் முடிக்க, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி, சீனியாரிட்டி மற்றும் காலி பணியிடங்களின் அடிப்படையில் விற்பனையாளருக்கு, எழுத்தர் அல்லது உர விற்பனையாளர்; எடையாளருக்கு விற்பனையாளர் பதவி உயர்வு அளிக்கும் பணி நடந்து வருகிறது.

ஊழியர் பதவி உயர்வு!

கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் எடையாளர், விற்பனையாளருக்கு தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கும் பணியை, அக்., 6க்குள் முடிக்க, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி, சீனியாரிட்டி மற்றும் காலி பணியிடங்களின் அடிப்படையில் விற்பனையாளருக்கு, எழுத்தர் அல்லது உர விற்பனையாளர்; எடையாளருக்கு விற்பனையாளர் பதவி உயர்வு அளிக்கும் பணி நடந்து வருகிறது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
30-செப்-202208:06:16 IST Report Abuse
R.RAMACHANDRAN கூட்டுறவு சங்கங்களில் ரேஷன் கடை விற்பனையாளர் பணியும் உர விற்பனையாளர் பணியும் ஒன்றே. உர விற்பனையாளர் பணியை விட ரேஷன் கடை விற்பனையாளர் பணி சிரமம் மிக்கதாக இருந்தாலும் உர விற்பனையாளர் மற்றும் கடை நிலை ஊழியருக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி அளவிற்கு சம்பளம் வழங்கி 1990 முதல் அரசு சுரண்டி வருகிறது. இதிலிருந்து தப்பிக்கும் விதத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் உர கடை விற்பனையாளர் வேறு வேறு என திருக்கிறது அரசு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X