திருப்பூர்:திருப்பூரில், பெண்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.திருப்பூரை அடுத்த முதலிபாளையத்தை சேர்ந்தவர் சாரதா, 35. கடந்த 24ம் தேதி வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், சாரதாவின் மகளிடம் கத்தியை காட்டி மிரட்டி, இரு சவரன் நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறித்து சென்றார்.ஊத்துக்குளி போலீசார் விசாரித்து வந்தனர்.விசாரணையில், காங்கயத்தை சேர்ந்த கணேசன், 42 என்பவர், இரு நாட்களுக்கு முன், கொங்கு மெயின் ரோட்டில் பெண்ணிடம் விலாசம் கேட்பது போல் சென்று நகையை பறிக்க முயன்றார்.அப்பகுதியினர் பிடித்து விசாரித்த போது, டூவீலரை விட்டுவிட்டு தப்பியது தெரிந்தது. டூவீலருக்குள், இரு மொபைல் போன், வாட்ச், வெள்ளி கொலுசு, கவுரிங் நகை இருந்ததும் மற்றும் டூவீலரும் திருட்டு வாகனம் என்பது தெரிந்தது.தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.