சகோதயா கால்பந்து: விவேகானந்தா அபாரம்

Added : செப் 30, 2022 | |
Advertisement
கோவை:கோவை சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியின் மாணவிகளுக்கான மூன்று பிரிவுகளிலும், விவேகானந்தா அகாடமி அணி வெற்றி பெற்று அசத்தியது. கோவை சகோதயா பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி, யுவபாரதி பப்ளிக் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 17 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். மாணவ -
சகோதயா கால்பந்து: விவேகானந்தா அபாரம்

கோவை:கோவை சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியின் மாணவிகளுக்கான மூன்று பிரிவுகளிலும், விவேகானந்தா அகாடமி அணி வெற்றி பெற்று அசத்தியது. கோவை சகோதயா பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி, யுவபாரதி பப்ளிக் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 17 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். மாணவ - மாணவிகளுக்கு 14, 17, மற்றும் 19 ஆகிய வயது பிரிவின் அடிப்படையில், போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாணவிகள் பிரிவில் விவேகானந்தா அகாடமி மேல்நிலைப்பள்ளி 14 வயது பிரிவில், 1 - 0 என்ற கோல் கணக்கில் யுவுபாரதி பப்ளிக் பள்ளியையும்; 17வயது பிரிவில், பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளியை 2 - 1 என்ற கோல் கணக்கிலும்; 19 வயது பிரிவில், கிட்ஸ் கிளப் மேல்நிலைப்பள்ளி அணியை, 1 - 0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி, மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. இதேபோல், மாணவர்களுக்கான 14 வயது பிரிவில், சாகர் சர்வதேச பள்ளி, 1 - 0 என்ற கோல் கணக்கில், சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியையும்; 19 வயது பிரிவில், பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளியை 5 - 0 என்ற கோல் கணக்கிலும் வென்று இரு பிரிவுகளில் முதலிடத்தை பிடித்தது.17 வயது பிரிவில், யுவபாரதி பப்ளிக் பள்ளி அணி, 4 - 0 என்ற கோல் கணக்கில் ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X