ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு : நவ., 22ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி :'மிருக வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நவ., 22ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தவும்,மஹாராஷ்டிராவில் காளை மாட்டு வண்டி பந்தயம் நடத்தவும் மிருக வதை தடுப்பு
ஜல்லிக்கட்டு, வழக்கு , நவ, 22, விசாரணை

புதுடில்லி :'மிருக வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நவ., 22ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.



தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தவும்,மஹாராஷ்டிராவில் காளை மாட்டு வண்டி பந்தயம் நடத்தவும் மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, 2016ல் தமிழகத்தில் மாபெரும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து, தமிழகஅரசு சட்ட திருத்தம் மேற்கொண்டு, ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்தது. மஹாராஷ்டிராவிலும் மாட்டு வண்டி பந்தயத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.


latest tamil news



இந்த உத்தரவுகளை எதிர்த்து, 'பீட்டா' எனப்படும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு உட்பட பல்வேறு தரப்பினர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது' என, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் வாதிட்டார்.இந்த விவகாரம், நவ., 22ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Sivagangai,இந்தியா
30-செப்-202213:02:35 IST Report Abuse
Elango ஜல்லிக்கட்டை விட மாட்டுவண்டி பந்தயதை உடனே தடை செய்ய வேண்டும்... வாய் இல்லா ஜீவனை தார் ரோட்டில் ஓட விட்டு இரத்தம் பின்னாடி வடிய வடிய குத்தி ஓட்டி செல்கிறார்கள் வாயில் நுரை தள்ளி கொண்டு மாடுகள் ஓடும் போது இதயமே வெடித்துவிடும்...பணம் மட்டும் வாழ்க்கையா...
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
30-செப்-202212:25:35 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy மாடுகளுக்கு முக்கணக்கயிறு கூடாது என பீட்டா அமைப்பு நீதி மன்றத்தில் வழக்கு போட்டுல்லது. எதனையை எதிர்த்து போரிடுவது, நீதி மன்றம் இந்த மாதிரி வழக்குகளை எடுத்து கொள்ளலாமா? வெளிநாட்டு பீட்டா அமைப்பு நாட்டு இனத்தை ...
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
30-செப்-202211:55:55 IST Report Abuse
தமிழ்வேள் நாட்டு மாடுகள் என்ற இனத்தையே அழித்து, கலப்பின மாடுகள் [உண்மையில் இவை பெரிய சைஸ் பன்றிகள் மட்டுமே] இந்த நாட்டினுள் புகுத்தப்பட்ட மேற்கு நாடுகள் செய்யும் விஷமத்தனம் ... வலுவான காளைக்கன்றுகளை கண்டறிய, இயல்பான முறையில் கருவுறுதல் நடக்க, இந்த பாரம்பரிய முறை வழக்கத்தில் இருக்கிறது ...இன்று மாடுகள், நாளை மனிதர்களுக்கும் இயற்கை முறை கருவுறுதலை தடை செய்யவேண்டும் என்பார்கள். பீட்டா, நீல சிலுவை கும்பல்கள், வெளிநாட்டுக்கைக்கூலிகளே. இந்த கும்பல்கள் ஒழிக்கப்பட்டால்தான் இந்த நாட்டின் பாரம்பரிய முறை மீட்டெடுக்கப்படும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X