ஆயுத பூஜைக்காக 2 நாட்களில் 3,700 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Added : செப் 30, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை : தமிழகத்தில், ஆயுத பூஜை கொண்டாட்டத்தையொட்டி, இன்றும், நாளையும் 3,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.தமிழகத்தில், பெரும்பாலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை வரும் 4ம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது.நாளையும், நாளை மறுநாளும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள். வரும் 5ம்
Special Bus, TNSTC, SETC,bus, பஸ், ஆயுத பூஜை,சிறப்பு பேருந்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழகத்தில், ஆயுத பூஜை கொண்டாட்டத்தையொட்டி, இன்றும், நாளையும் 3,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில், பெரும்பாலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை வரும் 4ம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது.நாளையும், நாளை மறுநாளும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள். வரும் 5ம் தேதி தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் பலரும், இன்று முதல் சொந்த ஊர்களுக்கு செல்லதிட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு பயனளிக்கும் வகையில், இன்றும், நாளையும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.latest tamil news


சென்னையில் இருந்து, வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக, 2,050 சிறப்பு பஸ்களும்; மற்ற ஊர்களில் இருந்து 1,650 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மூன்று சிறப்பு பஸ் நிலையங்கள் வாயிலாக வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன.* திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலுார், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புதுச்சேரி செல்லும் பஸ்கள், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்படும்.* வேலுார், ஆரணி, ஆற்காடு, திருப்பத்துார், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள், பூந்தமல்லி எம்.டி.சி., பணிமனை அருகில் உள்ள பைபாஸ் சாலையில் இருந்து புறப்படும்.* மற்ற ஊர்களுக்கான அனைத்து பஸ்களும், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
30-செப்-202211:06:07 IST Report Abuse
rajan_subramanian manian என்ன ஆயுத பூஜைக்கு? சிறப்பு விடுமுறை நாள் என்று சொல்லுங்கள். திராவிட மாடலுக்கு கோபம் வந்துவிடும்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
30-செப்-202206:15:32 IST Report Abuse
Mani . V அதே பழைய இரும்புகள், புதிய ஸ்டிக்கர்களுடன்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-செப்-202206:05:42 IST Report Abuse
Kasimani Baskaran அனைவரும் பயணித்து நட்டத்தில் இயங்கும் அரசு பேருந்துக்களை லாபத்தில் நடத்திவிட முடியாது. ஏனென்றால் அவை திராவிட மாடலில் இயங்குபவை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X