இது உங்கள் இடம்: கழக ஆட்சிக்கு உடன் பிறப்புக்களே 'சத்ரு!'

Added : செப் 30, 2022 | கருத்துகள் (56) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:கி.வெங்கடேஷ், பாண்டியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் காலுான்றி விட வேண்டும் என்று நினைக்கிற மத வெறி நச்சு சக்திகள், 'திராவிட மாடல்' ஆட்சிக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்தி விடவேண்டும் என்ற நோக்கத்தில், மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்க
DMK, MK Stalin, Stalin, ஸ்டாலின், திமுக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:


கி.வெங்கடேஷ், பாண்டியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் காலுான்றி விட வேண்டும் என்று நினைக்கிற மத வெறி நச்சு சக்திகள், 'திராவிட மாடல்' ஆட்சிக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்தி விடவேண்டும் என்ற நோக்கத்தில், மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்க பார்க்கின்றன. அதற்காக கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் -எம்.பி.,க்களின் பேச்சுக்களை வெட்டியும், ஒட்டியும், குறிப்பிட்ட சில பகுதிகளை தவறாக பொருள்படியான வாசகங்களுடன் வெளியிட்டு வருகின்றன.'அவற்றை தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்த நினைக்கின்றன. அவர்கள் வெற்று அகப்பைகள். அதனால், வேகமாக சுழல்கின்றனர். நம் கையில் ஆட்சி, மக்கள் நலன் எனும் அரிசியும், பருப்பும் கொண்ட அகப்பையை வைத்திருக்கிறோம்' என்று கூறியிருக்கிறார், முதல்வர் ஸ்டாலின்.ஆனால், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த, எதிர்க்கட்சிகள் எதுவுமே தேவையில்லை; சொந்தக் கட்சியினரே போதும். நாம் அதிகமாக விவரிக்க வேண்டிய அவசியமில்லை.ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல, கழக அமைச்சர்களில் ஒருவரான பொன்முடியின் பேச்சை மட்டும் சுட்டிக்காட்டுவோம். 'உங்களுக்கு ரேஷன் கார்டுக்கு, 4,000 ரூபாய் கொடுத்தாரு; வாங்குனீங்களா இல்லையா...வாயை திறங்க; இப்போ பஸ்ல எப்படி போறீங்க, எல்லாரும், 'ஓசி'யில் பயணிக்கிறீங்க' என்று பொதுக் கூட்டம் ஒன்றில், பெண்களை பார்த்து கேட்டிருக்கிறார்


latest tamil newsஅவர். ரேஷன் கார்டுக்கு கொடுத்த, 4,000 ரூபாயும், பஸ்களில் பெண்கள், 'ஓசி'யில் பயணம் செய்வதற்கு உண்டான தொகையையும், கழக அறக்கட்டளையில் இருந்தோ, முதல்வரின் வங்கி சேமிப்பில் இருந்தோ, அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,-க்கள், எம்.பி.,க் களின் மணிபர்சில் இருந்தோ எடுத்து கொடுக்கவில்லை; அத்தனையும் மக்களின் வரிப்பணம். இப்படித் தான், தி.மு.க.,வினர் பலர் மனம் போனபடி, இஷ்டத்துக்கு பேசி வருகின்றனர்.மக்களின் வரிப் பணத்தில் கொடுப்பதையே, ஏதோ தங்கள் சொந்த காசை போட்டு கொடுப்பது போல, படம் காட்டுவது மக்களுக்கு தெரியாமல் இல்லை.கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது முதல் செய்து கொண்டிருக்கும், அத்தனை அநியாயங்களையும், மக்கள் கணக்கெடுத்துக் கொண்டு தான் வருகின்றனர். என்ன? மக்களால் உங்களின் கழுத்தைப் பிடித்து தள்ளி, ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற முடியாது. அந்த இறுமாப்பு தான் இப்படியெல்லாம், உங்களை பேசத் துாண்டுகிறது.மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சொன்னது போல, 'ரைட்டு ரீகால்' என்ற, மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் உரிமை மட்டும் அமலில் இருந்திருந்தால், கழகம் ஆட்சி பீடத்தில் இருந்து, எப்போதோ கழற்றி விடப்பட்டிருக்கும். என்ன செய்ய... அந்த சட்டம் அமலுக்கு வரவில்லையே. கழக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த, மதவெறி நச்சு சக்திகள் எதுவும் தேவை இல்லை. கழக உடன்பிறப்புக்களும், கழக கண்மணிகளுமே போதும்... அனாவசியமாக அடுத்தவர் மீது குற்றம் சுமத்தி, குளிர் காய முயலாதீர்கள் முதல்வரே

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
30-செப்-202221:24:26 IST Report Abuse
Vena Suna மக்கள் காசுக்காக ஓட்டு போடும் வரை,திமுக தான்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
30-செப்-202216:32:48 IST Report Abuse
DVRR அரசனை எவ்வழி குடிபடைகள் அவ்வழி???அனால் திராவிட மாடல் அரசில் குடிபடைகள் எவ்வழி அரசனும் அவ்வழியே, அதாவது ரூ 250 ஆட்கள் அறிவின் நிலை தான் இந்த அரசனின் அறிவின் நிலை என்று அர்த்தம்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
30-செப்-202216:19:51 IST Report Abuse
sankaseshan உசந்த ஜாதி தாழாழ்ந்த ஜாதி ,இதை வைத்து ஆட்டம் போடுறதே இரண்டு கழகங்கள்தான் சொரியார் சொன்னதை கேட்காத சிஷ்ய பிள்ளைகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X