'ஹிந்து அமைப்பு பிரமுகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ்!'

Added : செப் 30, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
''உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதில் கூட, தமிழக அரசு பாகுபாடு பார்க்கிறது,'' என, 'முஸ்லிம் ஜாக்ரன் மன்ச்' அமைப்பின் தேசிய துணை தலைவர் பாத்திமா அலி குற்றம் சாட்டினார். அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் உயிருக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. ஹிந்து அமைப்புகளின்
 Muslim Jagran Manch, Police Security, Fatima Ali, முஸ்லிம் ஜாக்ரன் மன்ச், தமிழக அரசு, ஹிந்து, போலீஸ் பாதுகாப்பு, பாத்திமா அலி, Government of Tamil Nadu, Hindu,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

''உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதில் கூட, தமிழக அரசு பாகுபாடு பார்க்கிறது,'' என, 'முஸ்லிம் ஜாக்ரன் மன்ச்' அமைப்பின் தேசிய துணை தலைவர் பாத்திமா அலி குற்றம் சாட்டினார்.

அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் உயிருக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் பலரும் தேச விரோதிகளால் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர்.


நடவடிக்கை இல்லை


ஆர்.எஸ்.எஸ்., துணை அமைப்பான, முஸ்லிம் ஜாக்ரன் மன்ச் தேசிய துணை தலைவரான நான், நாடு முழுதும் சென்று மக்களை சந்தித்து, பா.ஜ., அரசின் கொள்கை, செயல்பாடுகள் குறித்து பேசி வருகிறேன்.ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடு குறித்தும் மக்களிடம் எடுத்துச் செல்கிறேன். ஆர்.எஸ்.எஸ்., கொள்கையோடு ஒத்துப் போகாதவர்களில் சிலர், என் செயல்பாடுகளை தடுக்கவும், என்னை முடக்கி போடவும் முயற்சிக்கின்றனர்.



கடந்த ஜனவரியில், செங்கல்பட்டு அருகே, என் கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர். இது தொடர்பாக, போலீசில் புகார் கொடுத்தேன்; நடவடிக்கை இல்லை. தொடர்ந்து கொலை மிரட்டல் போன் வருகிறது. இது தொடர்பாகவும், சென்னை, நுங்கம்பாக்கம் போலீசுக்கு தகவல் கூறினேன்; நடவடிக்கை இல்லை. இந்நிலையில், தமிழக போலீசார், ஆக., 22 முதல் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கினர்.



அதே போல, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு, உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் பலருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கினர்.அப்போதே, உயர் போலீஸ் அதிகாரிகளிடம், 'போலீஸ் பாதுகாப்பு வழங்குவது தற்காலிகமானது என்றால், அது இல்லாமலேயே இருந்து கொள்கிறேன்' என்றேன். அதற்கு அவர்கள், 'நிரந்தர போலீஸ் பாதுகாப்புக்கு தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.



ஆனால், ஒரு மாதம் கடந்த நிலையில், இம்மாதம் 26ல், எனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்று விட்டனர். அதற்கு எந்த காரணமும் தெரிவிக்கவில்லை.என்னை போலவே, தமிழகம் முழுதும் ஹிந்து மத அமைப்பு பிரமுகர்கள் பலருக்கும் வழங்கப்பட்ட, போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.


latest tamil news





அநாகரிகம்


போலீஸ் பாதுகாப்பு கொடுத்து திரும்ப பெற்றதன் வாயிலாக, எங்களை அடையாளம் காட்டியது போல ஆகி விட்டது.தென் மாநிலங்களில், மாற்று மத கலகக்காரர்களிடம் இருந்து, மக்களைக் காக்க போராடும் ஒரே முஸ்லிம் பெண் நான் தான். எனக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத சூழலில் தான் தமிழக அரசு உள்ளது.



உயிர் விஷயத்தில் கூட, தமிழக அரசு அரசியல் செய்வது, அநாகரிகமாக உள்ளது. என்னுடன் வரும் மெய்காப்பாளர் பாதுகாப்பை விலக்கி கொண்ட தமிழக போலீஸ், உயிரற்ற என் வீட்டுக்கு காவல் போட்டுள்ளனர். மற்றவர்களுக்கு அது கூட இல்லை என அறிகிறேன்.இவ்வாறு பாத்திமா அலி கூறினார்.

- நமது நிருபர் --

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-செப்-202219:47:47 IST Report Abuse
பேசும் தமிழன் அம்மா... உண்மையை சொன்னால் அவர்களுக்கு பொறுக்காது.... பிறகு எப்படி மத வியாபாரம் பண்ண முடியும்???
Rate this:
Cancel
nisar ahmad -  ( Posted via: Dinamalar Android App )
30-செப்-202212:44:49 IST Report Abuse
nisar ahmad இவள் முஸ்லிம் பெயரில் .........
Rate this:
duruvasar - indraprastham,இந்தியா
30-செப்-202212:56:41 IST Report Abuse
duruvasarஐயர் , ஐயங்கார் என்ன பெயர்வைத்துக்கொண்டு கருத்து போடும் சன்மார்க்க ட்ராவிடின் ஸ்டாக்குகளும் இருக்கானுங்க...
Rate this:
Cancel
Aruna -  ( Posted via: Dinamalar Android App )
30-செப்-202211:11:27 IST Report Abuse
Aruna இயலாமையை அரசு சொல்லி விட்டது மத்திய வெளியுறவுத்துறை துறை பாது காப்பு தரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X