மாணவர்களிடையே போதைப் பழக்கத்தை தடுக்க மாநில அளவில் விழிப்புணர்வு

Added : செப் 30, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
கோவை: மாணவர்களிடையே போதைப்பழக்கத்தை தடுக்க, மாநில அளவில் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள, தமிழ்நாடு சுயநிதி, கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகளின் சங்கம் திட்டமிட்டுள்ளது.சமீபகாலமாக, மாணவர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. 'மாணவர்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாவது வருத்தம் அளிக்கிறது' என, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தமிழக முதல்வரே
Addiction, Awareness, Students,போதைப்பழக்கம், விழிப்புணர்வு, கோவை, மாணவர்கள், Coimbatore,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: மாணவர்களிடையே போதைப்பழக்கத்தை தடுக்க, மாநில அளவில் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள, தமிழ்நாடு சுயநிதி, கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகளின் சங்கம் திட்டமிட்டுள்ளது.

சமீபகாலமாக, மாணவர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. 'மாணவர்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாவது வருத்தம் அளிக்கிறது' என, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தமிழக முதல்வரே கவலை தெரிவித்திருக்கிறார். பல்வேறு அமைப்பினர் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், போதைப் பழக்கத்தால் ஏற்படும் விபரீதம் குறித்து, மாநில அளவில், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழ்நாடு சுயநிதி, கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகளின் சங்கமும் திட்டமிட்டுள்ளது.



latest tamil news


சங்க தலைவரும், கோவை ஏ.ஜே.கே., கலை, அறிவியல் கல்லுாரி செயலாளருமான அஜித் குமார் லால் மோகன் கூறியதாவது:போதையில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும். போதைக்கு அடிமையாகக் கூடிய இளைஞர்களால், தனிமனிதன், சமுதாயம் என, பலவகைகளிலும் சமூக சீர்கேடுகள் ஏற்படுகின்றன. மாணவர்கள் எதிர்காலம் கருதி, அனைத்து தனியார், அரசு உதவிபெறும் கல்லுாரிகள் ஒன்றிணைந்து போதைப் பொருள்கள் பயன்படுத்தாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.



போலீசாருடன் இணைந்து போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல், பேரணிகள், போதைப்பொருள் உறுதிமொழி, கட்டுரை, ஓவியம், வினாடி-வினா, பேச்சு பேட்டி, சர்வதேச போதைப்பொருட்கள் ஒழிப்பு தினம் அனுசரிப்பு உட்பட விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
30-செப்-202213:08:30 IST Report Abuse
Kumar குறிப்பிட்ட இனத்தை அழிக்க‌ அந்த இனத்தை மிக இழிவாக பேசி அழிக்க‌ வேண்டும்.அதனால் ஒரு இனம் வேறு நாடுகளில் முன்னேறுகிறது. அதுபோல குறிப்பிட்ட மதத்தை அழிக்க‌ அந்த மதத்தைமிக இழிவாக பேச வேண்டும் அல்லது மது,போதைப்ப்பொருள் போன்றவற்றை அதிகமாக புழங்கசெய்யவேண்டும். திருட்டுத் திராவிடர்கள் இதில் வல்லவர்கள். மாலை 7 மணிக்குத் தண்ணி அடித்து விட்டு பல இளைஞர்கள் ,மாட்டுக்கறியை தின்று விட்டு அழிகிறார்கள் .மதுரையில் தெற்கு வெளி வீதியில் பல இடங்களில் நாம் காணலாம்.சீனாவின் அபின் போரைப்போல‌ இப்ப தமிழ்நாட்டில் போதை அடிமைகளை திருட்டுத் திராவிடர்கள் உருவாக்குகிறார்கள்.மக்களும் இதை அறியாமல் வீழ்ந்துகிடக்கிறார்கள்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-செப்-202210:15:49 IST Report Abuse
Lion Drsekar மிகவும் கடினம் காரணம் பெற்றோர்கள், தவறான ஆசிரியர்கள் , இளைஞர்கள் வாழும் சூழ்நிலை,மற்றும் தவறான ஊடகங்கள் , சினிமா மிகவும் கெடுத்துவிட்டது . இதில் யாரையும் குறிப்பிட்டு சொல்லவும் முடியாத நிலை, அப்படியே சொன்னாலும் பல இன்னல்களுக்கு ஆளாகவேண்டிய ஒரு நிலை, எல்லாமே ஒன்றுக்குள் ஒன்று பிணைந்து செயல்படுகிறது . இயற்க்கை மட்டுமே பாடம் கரிப்பிக்க முடியும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
30-செப்-202208:01:27 IST Report Abuse
Loganathan Kuttuva படிப்புக்கு செலவு பணம் இல்லை என்று சொல்பவர்கள் போதை பொருள் வாங்க பணம் எவ்வாறு கிடைக்கிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X