'பொன்னியின் செல்வன்': இணையதளங்களுக்கு தடை

Added : செப் 30, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை : ஐந்து மொழிகளில், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகையர் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த, 'பொன்னியின் செல்வன்' திரைப்படம், இன்று வெளியாகிறது. இப்படத்தை, அரசு மற்றும் தனியார் இணையதள சேவை நிறுவனங்கள் வாயிலாக சட்டவிரோதமாக, 2,405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி, தயாரிப்பு நிறுவனமான 'லைகா' சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Ponniyin Selvan, பொன்னியின் செல்வன்

சென்னை : ஐந்து மொழிகளில், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகையர் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த, 'பொன்னியின் செல்வன்' திரைப்படம், இன்று வெளியாகிறது.

இப்படத்தை, அரசு மற்றும் தனியார் இணையதள சேவை நிறுவனங்கள் வாயிலாக சட்டவிரோதமாக, 2,405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி, தயாரிப்பு நிறுவனமான 'லைகா' சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கு, நீதிபதி எம்.சுந்தர் முன், விசாரணைக்கு வந்தது.



மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, ''பெரும் பொருள் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை, திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால், மிகுந்த இழப்பு ஏற்படும்,'' என்றார். இதையடுத்து, படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து, நீதிபதி எம்.சுந்தர் உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - mayiladuthurai,இந்தியா
30-செப்-202213:40:30 IST Report Abuse
ram ஏற்கனவே வந்து விட்டது இணையதளத்தில்
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
30-செப்-202209:20:03 IST Report Abuse
அசோக்ராஜ் வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் டெக்னாலஜி பற்றி அடிப்படை அறிவு இல்லாதது எவ்வளவு சௌகர்யமாக இருக்கு? நாலு சுவத்துக்குள் உக்காந்துகிட்டு பேப்பரில் கையெழுத்து போட்டாப் போதும்னு இருக்காங்க. இக்னொரன்ஸ் ஈஸ் ப்ளிஸ். கிங் கான்யூட் கதை கூட எவரும் படித்ததில்லையோ?
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-செப்-202209:11:11 IST Report Abuse
NicoleThomson முதலில் நம்ம முதல்வரின் தாய்மொழி பகுதி டெலிகிராம் குரூப்புகளை பின்தொடர்ந்தால் போதும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X