தேவகோட்டை,-தேவகோட்டையில் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடந்தது. சங்க தலைவர் சரவணன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட கவர்னர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். துணை கவர்னர் ராதாகிருஷ்ணன் தேவகோட்டையை சேர்ந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.மாநில நல்லாசிரியர் விருது பெற்ற அந்தோணிசாமியை கவுரவித்தனர். ரோட்டரி சங்க பட்டய தலைவர் ராமநாதன், மண்டல தலைவர் தண்ணீர்மலை, வட்டார கல்வி அலுவலர்கள் லட்சுமி தேவி, மாலதி வாழ்த்துரை வழங்கினர். விருது பெறும் ஆசிரியர்களை ராதாகிருஷ்ணன் அறிமுகம் செய்து வைத்தார். தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், குருசாமி, சரவண நாராயணன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.செயலர் மலைராஜன் நன்றி கூறினார்.