தேனி -தேனி தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்கள் பாதுகாப்பிற்கான தலைக்கவசம்,முகக்கவசம், காலணி, ரப்பர் கையுறை உள்ளிட்டவை 2,302 தொழிலாளர்களுக்கு ரூ.36 லட்சம் மதிப்பில் வழங்குகின்றனர். இந்நிலையில் காட்டுநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என நேற்று தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர். அவர்களிடம் அதிகாரிகள், 'பதிவு செய்தவர்களுக்கு தகுதி, முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். பேக்கிங் செய்ய ஆட்கள் இல்லாததால் வழங்குவதில் தாமதம் நிலவுகிறது. விரைவில் உபகரணங்கள் வழங்குவதாக ' உறுதி அளித்தனர். அதன்பின் கலைந்து சென்றனர்.