தேனி --மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பாதிக்கும் வகையில் நடக்கும் முறைகேடுகளை களைய புகார் பெட்டி வைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமார் தெரிவித்தார்
.மாவட்டத்தில் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை முல்லைப்பெரியாறு அணை பாசனத்தின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 7-7 ஏக்கர் நிலங்கள் இருபோக நெல் சாகுபடி நடக்கிறது. இது தவிர போடி கொட்டக்குடி ஆறு, பெரியகுளம் வராகநதி, வைகை ஆறு பாசனங்களில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடியாகிறது.
விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு கட்டுபடியான விலை வழங்கும் வகையில் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து கொள்முதல் செய்யப்படுகிது. தற்போது பெரியகுளம் கீழவடகரை, மேல்மங்கலம், ஜெயமங்கலம் பகுதிகளில் நெல் அறுவடை துவங்கி நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதில் 17 சதவீத ஈரப்பதத்தில் ஏ' கிரேடு சன்னரக நெல் குவிண்டால் ரூ. 2160க்கும், பொது ரகம் குவிண்டால் ரூ.2115 வரை கொள்முதல் செய்யப்பட்டன.
இன்னும் இரண்டு வாரங்களில் கூடலுார், கம்பம் பள்ளத்தாக்கில் நெல் கொள்முதல் நிலையம் துவங்க உள்ளனர். நெல் கொள்முதல் நிலைய செயல்பாடு குறித்து தினமலர் நாளிதழின் அன்புடன் அதிகாரி' பகுதிக்காக முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமார் பேசியதாவது: குத்தகை விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய வழிமுறைகள் என்னகுத்தகை நெல் விவசாயிகள், நில உரிமையாளர்கள் செய்து கொண்ட ஒப்பந்த நகலை பெற்றுக் கொண்டு கொள்முதலுககு அனுமதிப்போம். அது இல்லை எனில் வி.ஏ.ஓ., மூலம் நில குத்தகைதாரர், உரிமையாளர் என்பதற்கான சான்றிதழ் வழங்கினால் போதும். கலெக்டர் உத்தரவில் வேளாண்துறை சார்பில் குத்தகைதாரர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் இதில் பிரச்னை எழ வாய்ப்பு குறைவு.கொள்முதலின் ஈரப்பத அளவு என்னகாற்றின் ஈரப்பதம் கம்பம் பள்ளத்தாக்கில் அதிகரித்துள்ளது. இதனால் 17 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதலுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. குறைந்திருந்தால் பெற இயலாது. அரசின் கொள்முதல் விதிமுறைகளில் உள்ளபடி பெற்றுக்கொள்ளப்படும்.இடைத்தரகர்கள் மூலம் முறைகேடு நடப்பதாக விவசாயிகள் புகார் வருகிறதே இப்புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க பணப்பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் மாற்றி உள்ளோம்.
நெல் மூடை துாக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு ஒரு மூடைக்கு ரூ.10 வீதம் கூலி வழங்கப்படுகிறது. அதையும் தொழிலாளிக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு என டெண்டர் விடப்பட்டு தேர்வான நிறுவனத்தின் கூலித்தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
இது தவிர விவசாயிகள் புகார் தெரிவிக்க நெல்கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டி' வைத்து வரும் புகார்களை விசாரித்து தீர்வு காண தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ஈரப்பதம் 17 சதவீதம் கட்டாயமா மத்திய உணவு கொள்முதல் விதியில் 17 சதவீதம்தான் குறிப்பிடப்பட்டு கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளன. குறைவாகவோ, அதிகரித்தாலோ பராமரித்து, அரிசியாக மாற்றி விற்பனைக்கு கொண்டு செல்வதில் பிரச்னை ஏற்படுகிறது. நெல்லின் திறனை பொருத்து கொள்முதலில் சில சலுகைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் மிக அதிகபடியான ஈரப்பதம், மிக குறைவான ஈரப்பத நெல் மூடைகளை கொள்முதல் செய்ய இயலாது. அறுவடைக்கு முன் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாதது ஏன்மாவட்ட வேளாண் துறையின் கோரிக்கை, விவசாயிகளின் அறுவடை அளவை பொறுத்து நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதனால் விவசாயிகள் அறுவடை விபரங்கள் தெரிவித்தால் உடனடியாக அப்பகுதியில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் பணிகள் துவங்கப்படும், விவசாயிகள் புகார்களை முதுநிலை மண்டல மேலாளர் 94430 - 50457 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.