தேனி -தேனி மாவட்ட கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்,' தேனியில் இருந்து கடமலைக்குண்டு பகுதிக்கு ஆசிரியர்களை பணிமாறுதல் செய்து பிற மாவட்டங்களில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு தேனியில் பணி வழங்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் ராஜவேல் தலைமை வகித்தார். பொருளாளர் சுமதி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ராம்குமார் வரவேற்றார். வட்ட தலைவர் சீனிவாசன், செயலாளர் செல்லதுரை, வட்டார செயலாளர் கிருஷ்ணசாமி, கல்விமாவட்ட செயலாளர் விக்கிரமன் நன்றி கூறினார்.