சிறு சேமிப்பு திட்டம்: வட்டியை உயர்த்தியது அரசு

Added : செப் 30, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு, சிறு சேமிப்பு திட்டங்கள் சிலவற்றுக்கான வட்டியை, 30 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு உயர்த்தி அறிவித்துள்ளது.இது குறித்து, மத்திய நிதிஅமைச்சகத்தின் அறிக்கை: சிறு சேமிப்பு திட்டங்கள் சிலவற்றில், மூன்றாவது காலாண்டுக்கான வட்டி விகிதம், 30 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அஞ்சல் அலுவலகத்தில் உள்ள மூன்று ஆண்டுகளுக்கான வைப்புத்
Central Govt, Interest Rate,Small Savings, மத்திய அரசு, சிறு சேமிப்பு, வட்டி, , Small Savings, Interest,

புதுடில்லி: மத்திய அரசு, சிறு சேமிப்பு திட்டங்கள் சிலவற்றுக்கான வட்டியை, 30 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு உயர்த்தி அறிவித்துள்ளது.இது குறித்து, மத்திய நிதிஅமைச்சகத்தின் அறிக்கை: சிறு சேமிப்பு திட்டங்கள் சிலவற்றில், மூன்றாவது காலாண்டுக்கான வட்டி விகிதம், 30 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அஞ்சல் அலுவலகத்தில் உள்ள மூன்று ஆண்டுகளுக்கான வைப்புத் தொகை வட்டி, 5.5 சதவீதத்தில் இருந்தது, 5.8 சதவீதமாக உயர்கிறது.மூத்த குடிமக்களின் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி, அக்டோபர் - டிசம்பர் காலத்தில், 20 அடிப்படை புள்ளிகள் உயர்கின்றன. இதனால் தற்போதைய 7.4 சதவீத வட்டி, 7.6 சதவீதமாக உயரும். 'கிசான் விகாஸ்' பத்திரங்களுக்கான கால அளவு மற்றும் வட்டி விகிதங்களும் திருத்தப்பட்டு உள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
30-செப்-202208:12:31 IST Report Abuse
chennai sivakumar Very marginal increase which will make no impact especially for senior citizens. Anyway somethibg is better than nothing
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X