பட்டினப்பாக்கத்தில் மெரினா வர்த்தக மையம்: 35 லட்சம் சதுர அடியில் பிரமாண்ட வணிக வளாகம்

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை: பட்டினப்பாக்கத்தில், 35.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் 'மெரினா வர்த்தக மையம்' அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை, வீட்டுவசதி வாரியம் துவக்கி உள்ளது.சென்னை பட்டினப்பாக்கத்தில், வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமாக, 25.16 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு ஏற்கனவே இருந்த, அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளில் பெரும்பாலான கட்டடங்கள், 10 ஆண்டுகளுக்கு முன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பட்டினப்பாக்கத்தில், 35.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் 'மெரினா வர்த்தக மையம்' அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை, வீட்டுவசதி வாரியம் துவக்கி உள்ளது.



latest tamil news




சென்னை பட்டினப்பாக்கத்தில், வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமாக, 25.16 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு ஏற்கனவே இருந்த, அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளில் பெரும்பாலான கட்டடங்கள், 10 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டன.
இங்கிருந்து வெளியேற்றப்பட்டோருக்கு, இதே இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் போது, வீடு ஒதுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதன் பின், இங்கு சுயநிதி முறையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, கடந்த ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி வாரியம் திட்டமிட்டது. விலை அதிகம் உள்ளிட்ட காரணங்களால், இத்திட்டம் ஆரம்ப நிலையிலேயே கைவிடப்பட்டது.

இதையடுத்து, இங்கு வணிக வளாகம் கட்ட, கடந்த ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. நிர்வாக குளறுபடிகள் காரணமாக, இந்த திட்டமும் முடங்கியது.இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், 'இங்கு வணிக வளாகம் அமைக்கும் திட்டத்தை மாற்றி, 'மெரினா வர்த்தக மையம்' அமைக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது. இதற்கான பணிகளை, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமாக பட்டினப்பாக்கத்தில், 25.16 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், மீன்வளத் துறையிடம் ஒரு பகுதியும், ஆதிதிராவிடர் நலத்துறையிடம் ஒரு பகுதி நிலமும் உள்ளது. இந்த நிலங்களை, சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இங்கு அரசு அறிவித்தபடி, 35.50 லட்சம் சதுர அடி பரப்பளவில், 'மெரினா வர்த்தக மையம்' அமைக்கப்பட உள்ளது. அலுவலகம், வணிக வளாகம், நட்சத்திர ஹோட்டல், கன்வென்ஷன் சென்டர் என, பல்வேறு நவீன வசதிகள் அடங்கியதாக, இந்த மையம் அமைய உள்ளது. இதற்காக, தனியார் கலந்தாலோசகர் வாயிலாக, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news





பணிகள் வேகம்


இது குறித்து வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
'மெரினா வர்த்தக மையம்' திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கை அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை துவக்கப்பட்டு உள்ளது.நிலத்தின் மொத்த பரப்பளவில், 3.24 மடங்குக்கு கட்டுமானப் பரப்பு இருக்கும்படி, புதிய கட்டடம் வடிவமைக்கப்படும்.இதில், எந்தெந்த பயன்பாட்டுக்கு, எவ்வளவு பரப்பளவு ஒதுக்குவது என்பது முடிவாகி உள்ளது.

இதன் அடிப்படையில் விரிவான தொழில்நுட்ப அறிக்கை தயாரிக்கவும், வடிவமைப்பு, வரைகலை, வசதிகள் குறித்த விபரங்களை இறுதி செய்வதற்கான கலந்தாலோசகரை தேர்வு செய்யும் பணிகளும் துவங்கியுள்ளன.அக்., இறுதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு, வடிவமைப்பு தயாரிக்கும் பணிகள் துவங்கிவிடும். இதன் பின், கட்டுமானப் பணிகளுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
30-செப்-202216:59:52 IST Report Abuse
chennai sivakumar அங்கே புது தலைமை செயலகம் கட்ட முடியாதா. அவ்வளவு அறே இருக்கிறதே. அனாவசியமாக ஃபோர்ட் st George vadagaunkidukka வேண்டும். 40 மாடியில் இருந்து பார்த்தால் பேனா தெரியுமே
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
30-செப்-202214:16:24 IST Report Abuse
vpurushothaman பெயரை மாற்றி பழைய திட்டங்களைத் தொடருவதில் இவர்கள் கில்லாடிகள். கமிஷன் - கலெக்ஷன் நீடூழி வாழ்க
Rate this:
Cancel
30-செப்-202213:14:55 IST Report Abuse
மோகனசுந்தரம் அடச்சீ, இப்பதான் பூர் வாங்க பணியா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X