கிரைம் ரவுண்ட் அப்: பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து ரூ.2.47 லட்சம் பறிப்பு

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | |
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியை சேர்ந்த பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி ரூ.2 லட்சத்து 47ஆயிரம் வசூலித்து, தொடர்ந்து அலைபேசியில் மிரட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.திருவாடானை அருகே கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது பெண். கணவர் வெளியூரில் வேலை செய்கிறார். வீட்டு தேவைக்காக ஆன்-லைன் லோன் அப்ளிகேஷன்களில் பணம் பெற்று அதனை சிறிது
crime, police, arrest

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியை சேர்ந்த பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி ரூ.2 லட்சத்து 47ஆயிரம் வசூலித்து, தொடர்ந்து அலைபேசியில் மிரட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருவாடானை அருகே கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது பெண். கணவர் வெளியூரில் வேலை செய்கிறார். வீட்டு தேவைக்காக ஆன்-லைன் லோன் அப்ளிகேஷன்களில் பணம் பெற்று அதனை சிறிது சிறிதாக செலுத்தி வந்தார். இந்நிலையில், ஒரு லோன் செயலியின் பெயரில் ஜூன் மாதம் ரூ.2275 பெண்ணின் வங்கி கணக்கில் வரவானது.அதனை திரும்ப செலுத்தியும், நீங்கள் பணம் செலுத்தவில்லை என வட்டியுடன் சேர்த்து அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளது, என 'வாட்ஸ்-ஆப்'ல் தகவல் வந்தது. மேலும் பெண்ணின் நண்பர், உறவினர்கள் அலைபேசி எண்களுக்கு அப்பெண் கடன் வாங்கி ஏமாற்றி விட்டதாக எஸ்.எம்.எஸ்., அனுப்பினர்.


பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தும் பலருக்கு அனுப்பி உள்ளதாக மிரட்டினர். இதனால் அச்சமடைந்த அப்பெண் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் வரை ஆன்-லைனில் செலுத்தினார்.அதன் பிறகும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டினர். இதுகுறித்த பெண்ணின் புகாரின் பேரில் மர்ம நபர்கள் குறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.



செப்டிக் டேங்கில் தவறி விழுந்து 2 சிறுமிகள் பலி


உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேவுள்ள பண்ணைப்புரத்தில் திறத்திருந்த செப்டிக் டேங்கிற்குள் தவறி விழுந்த இரு சிறுமிகள் பலியாயினர்.


பண்ணைப்புரம் பாவலர் வீதியை சேர்ந்த ஈஸ்வரன் மகள் நிகிதா ஸ்ரீ 7. அதே ஊர் மேற்கு தெருவை சேர்ந்த ஜெகதீசன் மகள் சுபஸ்ரீ 6. இருவரும் அங்குள்ள பள்ளியில் படித்தனர். நேற்று இரவு 7வது வார்டில் உள்ள பொது கழிப்பறை செப்டிக் டேங்க் அருகே 4 சிறுமிகள் விளையாடினர். அங்குள்ள வேப்பமரத்தில் இலைகளை பறிக்க தாவி குதித்த போது அருகில் இருந்த செப்டிக் டேங்கிற்குள் இந்த இரு சிறுமிகள் தவறி விழுந்தனர். இதை பார்த்த மற்ற இரு சிறுமிகளும் ஒடிச் சென்று அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர். அங்கிருந்தவர்கள் செப்டிக் டேங்கிற்குள் விழுந்த சிறுமியரை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து சிறுமிகள் இறந்ததாக தெரிவித்தனர். கோம்பை போலீசார் விசாரிக்கின்றனர். சிறுமியின் உறவினர்கள் பண்ணைப்புரம் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.



ஈரோடுக்கு குண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை


ஈரோடு: ஈரோடு மாநகரில், வெடிகுண்டு மிரட்டலால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


latest tamil news


சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை, 6:55 மணிக்கு ஒரு அழைப்பு சென்றது. அதில் பேசிய நபர், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், மணிக்கூண்டு ஆகிய மூன்று இடங்களை குறிப்பிட்டு, ஏதாவது ஒரு இடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் எனக்கூறி இணைப்பை துண்டித்தார்.ஈரோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் டி.எஸ்.பி., ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார், ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர்.வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழப்பு பிரிவு, மோப்ப நாய் பிரிவினர் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், மணிகூண்டு, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். பயணியர் உடமைகள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன.


சந்தேகத்துக்குரிய நபர்களிடம் விசாரித்தனர். குப்பை தொட்டிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பரிசோதிக்கப்பட்டன. கேட்பாரன்றி கிடக்கும் பொருட்களை தொடக்கூடாது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுக்கு முன் இதேபோல், மூன்று இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி, மிரட்டல் விடுத்த நபரை, பல மாதங்களுக்கு முன் போலீசார் கண்டுபிடித்து சிறையில் அடைத்தனர். அந்த நபரே மீண்டும் குண்டு மிரட்டல் விடுத்திருக்கலாம் என கருதுகின்றனர்.



எலி பேஸ்ட் தின்ற குழந்தை பலி


திருநெல்வேலி: திருநெல்வேலி மானுார் அருகே இரண்டும் சொல்லான் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேதநாயகம். வீட்டில் எலி தொல்லைக்காக விஷ மருந்து பேஸ்ட் வைத்துஇருந்தார். மகள் ஷாம்லிரின் 3, எலி பேஸ்ட்டை மிட்டாய் என நினைத்து சாப்பிட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஷாம்லிரின் இறந்தார். மானுார் போலீசார் விசாரிக்கின்றனர்.



தேசிய நிகழ்வுகள்



காஷ்மீர் பஸ் ஸ்டாண்டில் அடுத்தடுத்து 2 குண்டு வெடிப்பு


latest tamil news


உதம்பூர்: ஜம்மு - காஷ்மீர் பஸ் ஸ்டாண்டில், நேற்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்து பஸ்கள் சேதம் அடைந்தன. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.



5 வயது சிறுமி பலாத்காரம்: சிறுவன் கைது


பாதோகி: உத்தர பிரதேசத்தில், 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த, 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.


உத்தர பிரதேசத்தில் பாதோகி மாவட்டத்தில், சூர்யவா கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி, இரவில் தன் குடிசைக்கு வெளியே துாங்கினாள். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன், அச்சிறுமியை யாரும் இல்லாத இடத்துக்கு துாக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இது குறித்து, அச்சிறுமி தன் பெற்றோரிடம் மறுநாள் காலை தெரிவித்துள்ளாள். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிந்து, அச்சிறுவனை நேற்று முன்தினம் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X