பள்ளி படிப்பை கைவிடுவோர் அதிகரிப்பு! கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
சென்னை : விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில், எட்டாம் வகுப்புடன் படிப்பை கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பள்ளிக் கல்வி துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதி தேர்வு முடிந்ததும், தேர்ச்சி பெறும் மாணவர்களில், உயர் வகுப்பில் சேர்ந்தோர் எண்ணிக்கை பற்றி ஆய்வு செய்யப்படும்.அதன்படி, கடந்த கல்வி ஆண்டில் பள்ளி படிப்பை
School Students, School Education, Govt School, சென்னை, மாணவர்கள், பள்ளிக் கல்வி, அரசு பள்ளி, CHENNAI, STUDENTS,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில், எட்டாம் வகுப்புடன் படிப்பை கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பள்ளிக் கல்வி துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதி தேர்வு முடிந்ததும், தேர்ச்சி பெறும் மாணவர்களில், உயர் வகுப்பில் சேர்ந்தோர் எண்ணிக்கை பற்றி ஆய்வு செய்யப்படும்.அதன்படி, கடந்த கல்வி ஆண்டில் பள்ளி படிப்பை முடித்தவர்கள், நடப்பு கல்வி ஆண்டில் படிப்பை தொடர்கின்றனரா என ஆய்வு செய்யப்பட்டது.இதில், தென்காசி, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், ஐந்தாம் வகுப்புடன் படிப்பை முடிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, ஆறாம் வகுப்பில் சேராமல், படிப்பை பாதியில் விட்டுள்ளனர்.latest tamil news


சென்னை, திண்டுக்கல் மற்றும் கடலுார் மாவட்டங்களில், எட்டாம் வகுப்புடன் படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, 10ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல், பல மாணவர்கள் இடைநிற்றல் ஆவதாக தெரிய வந்துள்ளது. இதேபோல், தென்காசி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், எட்டாம் வகுப்புடன், படிப்பை கைவிடுவதும் தெரியவந்துள்ளது.திண்டுக்கல், வேலுார், கரூர் மாவட்டங்களில், 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 சேராமல் படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.சென்னை, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கையும், முந்தைய ஆண்டுகளை விட குறைந்திருக்கிறது.திருப்பத்துார், பெரம்பலுார், நாகப்பட்டினம் மாவட்டங்களில், பல பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையே நடக்கவில்லை. அதனால், பல அரசு பள்ளிகளில், சில வகுப்புகள் மாணவர்கள் இன்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு தகவல்கள் அனைத்தும், பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் உத்தரவுப்படி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-அக்-202207:42:09 IST Report Abuse
அப்புசாமி தவறாமல் பள்ளிக்கு வந்து நல்ல மதிப்பெண்கள் வாங்குபவர்களின் பெற்றோருக்கு சந்தோசம்.....
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
30-செப்-202217:31:17 IST Report Abuse
Rajasekaran தமிழக மாணவர்களின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் மனச்சாட்சியின் படி வேதனையுடன் குமுறுபவர்கள், நிச்சயம் திராவிட மாடல் ஆட்சியை தேர்ந்தெடுத்தவர்களில் மிக மிக குறைந்த பட்சமாகத்தான் இருக்க முடியும் . இதையும் பல வருந்தத்தக்க செய்திகளை போகிற போக்கில் படித்து விட்டு மனதளவில் எவ்வித சலனமும் இல்லாமல் சுரனையற்று டாஸ்மாக்கை நோக்கி செல்பவர்கள் " படிக்க பிடிக்காது போடா , குடிக்க தெரிந்தால் போதும் " என்று இருநூறு ரூபாய்க்கும் ,ஓசி பிரியாணிக்கும் கொலுசுக்கும் புடவை வெற்றிக்கும் தங்கள் வாக்குகளை ஐந்து வருட குத்தகைக்கு விட்டு புதுப்பிக்கும் போலி விடியல்களை தூக்கிப் பிடிக்கும் பொறுபின்பற்ற குடி மக்களாகத்தான் இருக்க முடியும். தமிழ் மக்களுக்கு என்று , எப்படி இந்த பாவத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதிக்கப் போகிறதோ அன்று தான் அவர்களுக்கு உண்மையான விடியல்
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
30-செப்-202215:31:01 IST Report Abuse
spr கொஞ்சம் புள்ளி விவரத்துடன் வெளியிட்டால் மாணவிகளை விட பள்ளியை விட்டு விலகும் மாணவர் எண்ணிக்கை அதிகமென்று தெரிய வரும் கழக ஆட்சியில் கொடி கட்ட கும்பல் சேர்க்க சிந்திக்காத தெரியாத விரும்பாத மாணவர்களே அதிகம் தேவை அவர்களுக்கு பிரியாணி குவார்ட்டர் கொடுத்தால் ஜென்மத்துக்கும் அடிமை தேர்வு விவரங்கள் சொல்கின்றன அதிலும் பணப்புழக்கம் அதிகமுள்ளதால் படிப்பானேன் பின் வேலை கிடைக்கவில்லை என்று புலம்புவானேன் நான் தண்டச் சோறு கிங் தமிழ் மதர் டங் என்று பாடிக் கொண்டு ஜாலியாக இருக்கலாம் ஆனால் அதென்ன தமிழ் தாய் மொழியாக இருப்பவன் தண்டச் சோறு தின்பவனா வேலைக்கெல்லாம் போகமாட்டானா பாடியவனுக்குத் தான் புரியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X