உங்க ரெண்டு தரப்பு பலவீனங்கள் எல்லாம் பட்டவர்த்தனமாகுதே!

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | |
Advertisement
அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர்புகழேந்தி பேட்டி: முன்னாள் முதல்வர் பழனிசாமி, என்னை மிக மோசமாக பேசியுள்ளார். பன்னீர்செல்வத்தை சாடி வந்தவர், தற்போது என் மீது பாய்கிறார். 'நோட்டா'வுக்கு கீழ், ஓட்டு வாங்கியதாக தெரிவித்துள்ளார். அவர், 1987 நெடுங்குளம் ஊராட்சி தேர்தலில், 309 ஓட்டுகள் வாங்கி, 'டிபாசிட்' இழந்தார். பின், லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்து, 2001ல்
pugazhenthi, anbumani, jeyakumar, ramadoss, புகழேந்தி, அன்புமணி, ஜெயகுமார், ராமதாஸ்


அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர்புகழேந்தி பேட்டி:

முன்னாள் முதல்வர் பழனிசாமி, என்னை மிக மோசமாக பேசியுள்ளார். பன்னீர்செல்வத்தை சாடி வந்தவர், தற்போது என் மீது பாய்கிறார். 'நோட்டா'வுக்கு கீழ், ஓட்டு வாங்கியதாக தெரிவித்துள்ளார். அவர், 1987 நெடுங்குளம் ஊராட்சி தேர்தலில், 309 ஓட்டுகள் வாங்கி, 'டிபாசிட்' இழந்தார். பின், லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்து, 2001ல் அவருக்கு போட்டியிடும் வாய்ப்பே கொடுக்கப்படவில்லை.

உங்க ரெண்டு தரப்புக்கும் இடையில நடக்கிற சண்டையில, உங்க பலவீனங்கள் எல்லாம் பட்டவர்த்தனமாகுதே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

ஆம்னி பஸ் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்திய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், 'ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சேவை செய்யவில்லை. கட்டணம் அதிகம் என்று தெரிந்து தான், தனியார் பஸ்களில் மக்கள் பயணம் செய்கின்றனர். 'தனியார் பஸ்களின் கட்டணம், ஏழை மக்களை பாதிக்கவில்லை' என்று, ஆம்னி பஸ் உரிமையாளர்களின் பிரதிநிதி போல கூறியுள்ளார்.

அவங்களது பிரதிநிதியோ, இல்லையோ... ஆனா, அமைச்சர் இப்படி பேசியதற்கான, 'பிரதிபலன்' எப்படி இருக்கும் என்பது, தங்களுக்கு தெரியாதா, என்ன?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:

அ.தி.மு.க., ஆட்சியில், தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. தற்போது எங்கு பார்த்தாலும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடக்கின்றன. எங்கள் ஆட்சியில் அனைத்து மதத்தினரும் பாதுகாப்பாக இருந்தனர். தற்போது, நிலைமை மோசமாகி விட்டது.


latest tamil news'பழனிசாமி ஆட்சியே பரவாயில்லை' என்ற மனநிலைக்கு, மக்களும் சீக்கிரம் வந்துடுவாங்க பாருங்க!
மக்கள் நீதி மய்யம் மாநில செயலர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை:

இயற்கை வளங்களை பாதுகாக்க, சட்டவிரோதமாக மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முறையாக டெண்டர் விடப்பட்டு, குறிப்பிட்ட அளவுக்குத்தான் மணல் அள்ள அனுமதிக்கப்படுகிறது. இச்சூழலில், மணல் அள்ள கட்சிக்காரர்களுக்கு அனுமதி வழங்கியதாக, தி.மு.க., - எம்.பி., ராஜேஷ்குமார் பேசியது, யார் கொடுத்த தைரியம்?

அவருக்கு யார் தைரியம் தரணும்...? ஆளுங்கட்சி எம்.பி., மற்றும் மாவட்ட செயலருக்குரிய, 'கடமை'யை தானே அவர் செஞ்சிருக்கார்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:

சமீபத்தில் நடந்த எம்.பி.பி.எஸ்., படிப்பு சேர்க்கைக்கான நுழைவு தேர்வுகளில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில், 75 சதவீதத்தினரும், பிற மாணவர்களில், 85 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களால், மருத்துவ படிப்புக்கு ஈடு கொடுக்க முடியுமா என்று எழுப்பப்பட்ட சந்தேகங்களை, அரசு பள்ளி மாணவர்கள் தகர்த்துள்ளனர். வாய்ப்பும், தரமான கல்வியும் வழங்கப்பட்டால், தங்களால் சாதிக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

'அரசு பள்ளிகளில் பிள்ளைகள் படிப்பது கவுரவ குறைச்சல்' என கருதும் சிலருக்கு, இந்த உண்மை சரியான சவுக்கடி!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X