12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | |
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை (30.9.2022 - 6.10.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம் சூரியன், புதன் நன்மையை வழங்குவார்கள். சூரிய வழிபாடு நன்மை தரும்.அசுவினி: வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் நெருக்கடி இருக்கும். செயல்களில் கவனம் தேவை. ஞாயிறு முதல் முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். அரசு வழி முயற்சிகள்
வாரராசி, ராசிபலன், வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷிபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், கன்னி, விருச்சிகம்,  தனுசு, மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (30.9.2022 - 6.10.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.
மேஷம்


சூரியன், புதன் நன்மையை வழங்குவார்கள். சூரிய வழிபாடு நன்மை தரும்.


அசுவினி: வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் நெருக்கடி இருக்கும். செயல்களில் கவனம் தேவை. ஞாயிறு முதல் முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். அரசு வழி முயற்சிகள் நன்மையில் முடியும்.


பரணி: சந்தோஷமும் சங்கடமும் நிறைந்த வாரம். வெள்ளி, சனியில் சந்திராஷ்டமம் என்பதால் எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர்கள். ஞாயிறு முதல் உங்கள் விருப்பம் நிறைவேறும். செவ்வாய் முதல் தொழில் முயற்சி பலிதமாகும். வியாபாரம் விருத்தியாகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.


கார்த்திகை 1ம் பாதம்: வெள்ளி, சனியில் சந்திரன் எட்டாமிடத்தில் சஞ்சரிப்பதால் சங்கடம் பிரச்னைகளை சந்திப்பீர்கள். ஞாயிறு முதல் உங்கள் எண்ணம் நிறைவேறும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


சந்திராஷ்டமம்

29.9.2022 நள்ளிரவு 12.48 மணி - 2.10.2022 நள்ளிரவு 3.39 மணி
ரிஷபம்


புதன், சுக்கிரன், கேது, நன்மை வழங்குவர். விநாயரை வழிபட சங்கடம் தீரும்.


latest tamil news
கார்த்திகை 2, 3, 4: வெள்ளி, சனியில் செயல்கள் தடையின்றி நடந்தேறும். எதிர்பார்த்தவற்றில் சாதகமான நிலை உண்டாகும். ஞாயிறு, திங்களில் எதிர்பாராத இடையூறு ஏற்படும். செவ்வாய் முதல் செயல்கள் லாபமாகும். விருப்பம் நிறைவேறும்.


ரோகிணி: எண்ணம் நிறைவேறும் வாரம் இது. வெள்ளி, சனியில் முயற்சி பூர்த்தியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். ஞாயிறு, திங்களில் சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் நிதானம் தேவை. செவ்வாய் முதல் விருப்பங்கள் நிறைவேறும்.


மிருகசீரிடம் 1, 2: எதிர்பார்ப்பு நிறைவேறும் வாரம். முதல் இரண்டு நாட்களும் முயற்சிகள் தடையின்றி நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஞாயிறு, திங்களில் நிதானம் நன்மை தரும். செவ்வாய் முதல் செயல்களில் வெற்றி காண்பீர்கள். நன்மை அதிகரிக்கும்.


சந்திராஷ்டமம்

2.10.2022 அதிகாலை 4:00 மணி - 4.10.2022 காலை 6:20 மணி
மிதுனம்


ராகு, சுக்கிரன் நன்மை வழங்குவர். பெருமாள் வழிபாடு யோகம் தரும்.


மிருகசீரிடம் 3, 4: வெள்ளி முதல் திங்கள் வரை முயற்சிகளில் தெளிவும் வேகமும் இருக்கும். செயல்களில் ஆதாய நிலை உண்டாகும். எதிர்ப்பு விலகும். நிதிநிலை உயரும். செவ்வாய் காலை முதல் சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். வியாழன் காலை முதல் நன்மை தோன்றும்.


திருவாதிரை: நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த செயல்களை முடித்து நன்மைகளைக் காண்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். லாப ஸ்தான ராகு பொருளாதார நிலையை உயர்த்துவார். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். செவ்வாய் புதனில் அனைத்து செயல்களிலும் எச்சரிக்கை அவசியம்.


புனர்பூசம் 1, 2, 3: முதல் நான்கு நாட்கள் உங்கள் முயற்சிகளில் லாபம் காண்பீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய முயற்சிகள் அனுகூலமாகும். எண்ணம் நிறைவேறும். செவ்வாய், புதனில் உங்கள் விருப்பத்திற்கு மாறான சம்பவம் நடைபெறும் என்பதால் எச்சரிக்கை தேவை.


சந்திராஷ்டமம்

4.10.2022 காலை 6:21மணி 6.10.2022 காலை 8:51 மணி
கடகம்


சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் நன்மை வழங்குவர். திங்களூர் சந்திரனை மனதில் எண்ணி செயல்படுங்கள்.


புனர்பூசம் 4: முயற்சிகள் எளிதாக நிறைவேறும். அரசு வழியில் ஆதாயம் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தின் தேவை பூர்த்தி செய்வீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வியாழன் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செயலில் கவனம் தேவை.


பூசம்: யோகமான வாரம் இது. நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி சாதகமாகும். எதிர்ப்பு இல்லாமல் போகும். செல்வாக்கு உயரும். நினைத்ததை அடைவீர்கள். வியாழனன்று செயலில் தடுமாற்றம் உண்டாகும்.


ஆயில்யம்: திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்கு வெற்றியாகும். பொருளாதாரம் உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசு வழி செயல்கள் சாதகமாகும். வியாழனன்று தடுமாற்றம் நெருக்கடி தோன்றும்.


சந்திராஷ்டமம்

6.10.2022 காலை 8:52 மணி - 8.10.2022 மதியம் 12:23 மணி
சிம்மம்


சுக்கிரன், கேது நன்மை வழங்குவர். பைரவர் வழிபாடு சங்கடம் நீக்கும்.


latest tamil newsமகம்: முதல் இரண்டு நாட்களும் முயற்சிகள் இழுபறியாகவே இருக்கும்.. ஞாயிறு, திங்களில் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செவ்வாய் முதல் செயல்களில் வெற்றி அடைய கடும்முயற்சி மேற்கொள்வீர்கள். துணிச்சலான உங்கள் செயல்களால் நினைத்ததை சாதிப்பீர்கள்.


பூரம்: நன்மை அதிகமான வாரம் இது. முயற்சிக்கேற்ப லாபம் உண்டாகும். வெள்ளி, சனியில் முயற்சிக்கேற்ப வருமானம் காண்பீர்கள். ஞாயிறு, திங்களில் குடும்பத்தினர் ஆலோசனைகள் கேட்டு செயல்படுங்கள். செவ்வாய் முதல் செயல்கள் எளிதாக வெற்றியாகும்.


உத்திரம் 1: வெள்ளி, சனியில் எதிர்வரும் பிரச்னைகளை சமாளித்து நினைத்ததை அடைவீர்கள். ஞாயிறு, திங்களில் குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். செவ்வாய் முதல் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.
கன்னி


சுக்கிரன், சந்திரன் நன்மை வழங்குவர். காளத்தீஸ்வரரை வழிபடுங்கள்.


உத்திரம் 2, 3, 4: வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் எண்ணம் நிறைவேறும். முயற்சிகள் பலிதமாகும். நினைத்ததை அடைவீர்கள். திங்கள் முதல் திட்டமிட்டு செயல்படுவீர்கள். சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும்.


அஸ்தம்: வெள்ளி, சனியில் நன்மை அதிகரிக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். குடும்பத்தில் புதிய வரவு உண்டாகும். ஞாயிறு, திங்களில் முயற்சி இழுபறியாகும். செவ்வாய் முதல் சிந்தித்து செயல்படுவீர்கள். எண்ணங்கள் நிறைவேறும். சங்கடம் தீரும்.


சித்திரை 1, 2: வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் நிதி நிலை உயரும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். ஞாயிறு, திங்களில் விடாமுயற்சியால் நன்மை காண்பீர்கள். செவ்வாய் முதல் லாபம் அதிகரிக்கும்.
துலாம்


புதன், சுக்கிரன் நன்மை வழங்குவார். அனுமனை வழிபட்டு செயல்படுங்கள்.


சித்திரை 3, 4: வெள்ளி, சனியில் பண விஷயங்களில் கவனம் தேவை. ஞாயிறு, திங்களில் துணிச்சலுடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். குடும்பத்தினர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். செவ்வாய், புதனில் செயல்கள் இழுபறியாகும். வியாழன் முதல் எண்ணம் நிறைவேறும்.


சுவாதி: கவனமுடன் செயல்பட வேண்டிய காலம். ஜென்ம கேதுவும் சப்தம ராகுவும் அஷ்டம செவ்வாயும் நெருக்கடிகளை வழங்குவார்கள் என்றாலும் சந்திர பலத்தால் உங்களுடைய அத்தியாவசியத் தேவைகள் நிறைவேறும். வெள்ளி சனியில் பண வரவு அதிகரிக்கும். ஞாயிறு திங்களில் நெருக்கடிகள் நீங்கும்.


விசாகம் 1, 2, 3: நெருக்கடியான வாரம். வழக்கமான செயல்களிலும் இழுபறி இருக்கும். உங்கள் லாப ஸ்தானாதிபதி விரயத்தில் சஞ்சரிப்பதால் தேவைகளை அடைவதற்காக விடாமுயற்சி தேவைப்படும். சந்திர பலத்தால் அடிப்படைத் தேவை நிறைவேறும்.
விருச்சிகம்


ராகு, புதன், சுக்கிரன், சூரியன் நன்மை வழங்குவர். குருபகவானை வழிபடுங்கள்.


விசாகம் 4: வெள்ளி, சனியில் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஞாயிறு, திங்களில் நிதிநிலை உயரும். செயலில் சாதகமான நிலை உருவாகும். செவ்வாய், புதனில் புதிய முயற்சி நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.


அனுஷம்: முதல் இரண்டு நாட்களும் விருப்பப்படி செயல்படுவீர்கள். செலவு அதிகரிக்கும். ஞாயிறு, திங்களில் யோசித்து செயல்படவும். செவ்வாய் முதல் முயற்சிக்கேற்ப லாபம் காண்பீர்கள். குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வருமானத்திற்குரிய வழியைக் கண்டறிந்து செயல்படுவீர்கள்.


கேட்டை: வெள்ளி, சனியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். ஞாயிறு, திங்களில் வரவு செலவுகளில் கவனம் தேவை. செவ்வாய் முதல் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருமானம் காண்பீர்கள். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். வருமானம் உயரும்.
தனுசு


செவ்வாய், சூரியன், கேது நன்மை வழங்குவர். தட்சிணாமூர்த்தியை வழிபட சங்கடம் விலகும்.


மூலம்: ஆறாமிட செவ்வாயின் அருளாலும் கேது பகவானின் லாபஸ்தான சஞ்சரிப்பினாலும் செயலில் நன்மை காண்பீர்கள். வெள்ளி, சனியில் செலவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். ஞாயிறு முதல் மனம் மகிழும்படியான சம்பவம் நடைபெறும்.


பூராடம்: பெரும்பாலான கிரகங்கள் எதிர்மறையான நிலையில் சஞ்சரித்தாலும் செவ்வாயும், கேதுவும் உங்கள் நிலையை உயர்த்துவர். சூரியனால் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வெள்ளி, சனியில் கவனமுடன் செயல்படுவதால் விரயத்தை தவிர்க்கலாம். ஞாயிறு முதல் குழப்பங்களைத் தவிர்த்து செயல்பட்டால் முயற்சி வெற்றியாகும்.


உத்திராடம் 1: சோதனைகளைக் கடந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு வெள்ளி, சனியில் செலவு அதிகரிக்கும். ஞாயிறு முதல் எதிர்பார்ப்பு நிறைவேறும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட சங்கடம் விலகும். செவ்வாய் முதல் உங்கள் செயலில் மட்டும் கவனம் செலுத்தினால் நினைத்ததை அடைவீர்கள்.
மகரம்


சுக்கிரன், புதன் நன்மை வழங்குவர். பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.


உத்திராடம் 2, 3, 4: வெள்ளி, சனியில் முயற்சிகள் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். வேலை வாய்ப்புக்கான முயற்சி வெற்றியாகும். ஞாயிறு, திங்களில் அலைச்சல், செலவு அதிகரிக்கும் முயற்சிகள் இழுபறியாகும். செவ்வாய் முதல் விருப்பங்கள் பலிதமாகும்.


திருவோணம்: எண்ணம் நிறைவேறும் வாரம் இது. வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் முயற்சி வெற்றியாகும். தொழிலை விரிவு செய்து லாபம் காண்பீர்கள். ஞாயிறு, திங்களில் வீண் செலவு அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை. செவ்வாய் முதல் செயல்கள் லாபமாகும்.


அவிட்டம் 1, 2: வெள்ளி, சனியில் முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ஞாயிறு, திங்களில் வசித்து வரும் வீட்டை உங்கள் வசதிக்கேற்ப மாற்றம் செய்வீர்கள். செவ்வாய் முதல் நன்மை அதிகரிக்கும்.
கும்பம்


ராகு, சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். சனீஸ்வரரை வழிபடுங்கள்.


அவிட்டம் 3, 4: வெள்ளி முதல் திங்கள் வரை முயற்சிகள் சாதகமாகும். வியாபாரம் லாபத்தை நோக்கி செல்லும். குடும்ப பிரச்னைகள் சரியாகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். செவ்வாய், புதனில் செலவு அதிகரிக்கும். வியாழனில் நிலைமை சீராகும்.


சதயம்: வாரத்தின் முதல் நான்கு நாட்களும் எதிர்பார்ப்பு நிறைவேறும். பண வரவு மகிழ்ச்சி தரும். புதிய முயற்சி வெற்றியாகும். செவ்வாய், புதனில் திடீர் செலவு தோன்றும். சிலர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வர். .


பூரட்டாதி 1, 2, 3: எண்ணம் நிறைவேறும் வாரம் இது. வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வேலை வாய்ப்பு முயற்சி நிறைவேறும். வருமானம் பல வழிகளிலும் வரும். செவ்வாய், புதனில் உழைப்பு அதிகரிக்கும். செலவு கூடும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.
மீனம்


செவ்வாய், புதன் நன்மை வழங்குவர். வராகியை வழிபட சங்கடங்கள் விலகும்.


பூரட்டாதி 4: முயற்சிகள் வெற்றியாகும் வாரம் இது. பெரியோர்கள் வழிகாட்டுதலால் எண்ணங்கள் நிறைவேறும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தி லாபத்திற்கு வழி காண்பீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். சிலர் வேறு இடங்களுக்கு மாறுதலாகி செல்வர்.


உத்திரட்டாதி: பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்பதால் செயல்களில் நிதானம் தேவை. சந்திர பலத்தாலும், மூன்றாமிட செவ்வாயாலும் எதிர்பார்ப்புகளில் சில நிறைவேறும். துணிச்சலுடன் செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். பணியாளர்களுக்கு இடமாறுதல் வரலாம்.


ரேவதி: சந்திர பலத்தால் நன்மை அதிகரிக்கும். குழப்பம் விலகும். செயல்களில் உறுதி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். அஷ்டம கேது உடல்பாதிப்பை ஏற்படுத்தலாம் கவனம். வியாழனன்று எதிர்பாராத செலவு ஏற்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X