காங்., தலைவர் தேர்தல்: மல்லிகார்ஜூன் கார்கே - சசி தரூர் வேட்புமனு தாக்கல்

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (29) | |
Advertisement
புதுடில்லி: காங்., தலைவர் தேர்தலில் காங்., மூத்த நிர்வாகிகளில் ஒருவரான மல்லிகார்ஜூன் கார்கேயும், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரும் போட்டியிடுகின்றனர். இதற்காக அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.சசி தரூர் போட்டிகாங்., தலைவர் தேர்தல் அக்., 17 ல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில், மேலிடத்தின் ஆதரவு இல்லாமல், களமிறங்க போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி
Mallikarjun Kharge, Congress president, nomination Congress,காங்கிரஸ் , மல்லிகார்ஜூன் கார்கே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: காங்., தலைவர் தேர்தலில் காங்., மூத்த நிர்வாகிகளில் ஒருவரான மல்லிகார்ஜூன் கார்கேயும், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரும் போட்டியிடுகின்றனர். இதற்காக அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.




சசி தரூர் போட்டி


latest tamil news


காங்., தலைவர் தேர்தல் அக்., 17 ல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில், மேலிடத்தின் ஆதரவு இல்லாமல், களமிறங்க போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் அறிவித்தார். பின்னர், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார். அப்போது, தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டேன். நடுநிலை வகிப்பேன் என சோனியா கூறியதாக தெரிகிறது.



மன்னிப்பு கோரல்

ஆனால், மேலிடத்தின் ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் களமிறங்க முடிவு செய்தார். ஆனால், ராஜஸ்தான் முதல்வர் பதவியை கைவிட விரும்பவில்லை. இதனால், அவரது ஆதரவாளர்கள், கெலாட் தான் முதல்வராக நீடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என அறிவித்தனர். இதன் காரணமாக கட்சி மேலிடம் கடும் அதிருப்தி அடைந்தது.




latest tamil news


Advertisement

டில்லியில் சோனியாவை சந்தித்து பேசிய அசோக் கெலாட், ராஜஸ்தானில் நடந்ததற்கு மன்னிப்பு கோரியதுடன், தலைவர் பதவிக்கான தேர்தலில் களமிறங்க போவதில்லை எனக்கூறினார். இதனை தொடர்ந்து, மற்றொரு காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார். இதற்காக வேட்புமனுக்களை பெற்று கொண்டார்.




மேலிடத்தின் விருப்பம்


latest tamil news


இந்நிலையில், மல்லிகார்ஜூன் கார்கே களமிறங்க வேண்டும் என கட்சி மேலிடம் விரும்புவதாக , அவரிடம் காங்., மூத்த தலைவர் வேணுகோபால் கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் களமிறங்க போவதாக மல்லிகார்ஜூன் கார்கே அறிவித்தார். தொடர்ந்து, திக்விஜய் சிங், அவரை சந்தித்து பேசினார். பின்னர், தேர்தலில் இருந்து விலகிக்கொள்வதாக திக்விஜய் சிங் அறிவித்தார்.




வேட்புமனு தாக்கல்


latest tamil news


இந்நிலையில், தேர்தல் நடத்தும் குழுவினரிடம், சசிதரூர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


latest tamil news



இதன் பின்னர் மல்லிகார்ஜூன் கார்கே வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, அசோக் கெலாட், திக்விஜய் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர்.



அதேபோல், ஜார்க்கண்டை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி திரிபாதி என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.



அக்.,17 ல் ஓட்டுப்பதிவு நடக்கும் நிலையில், அக்.,19ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினம், யார் புதிய தலைவர் என்பது தெரிந்துவிடும்.




சோனியாவின் நம்பிக்‛‛கை'' நபர்


latest tamil news


மல்லிகார்ஜூன் கார்கே காங்., மேலிடத்திற்கு மிக நம்பிக்கையான நபரும் கூட. ராகுல் தலைவராக வேண்டும் என தனது ஆசையை அவர் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். கார்கே தற்போது ராஜ்யசபா காங்., எதிர்கட்சி தலைவராக உள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் 8 முறை எம்.எல்.ஏ.,வாகவும், 2 முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும் பதவி வகித்தவர். மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் ஆவார்.


தற்போது, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், கட்சி கொள்கையான ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், மல்லிகார்ஜூன் கார்கே, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் எனக்கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,கனடா
30-செப்-202223:39:02 IST Report Abuse
அன்பு மல்லிகார்ஜூன் சோனியாவின் பொம்மை. தரூர் பரவா இல்லை.
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
01-அக்-202207:39:52 IST Report Abuse
Fastrackஇருக்க கூடாது .....
Rate this:
Cancel
30-செப்-202221:11:37 IST Report Abuse
பேசும் தமிழன் காரிய கமிட்டியை கூட்டி... சட்டு புட்டுன்னு கட்சிக்கு காரியம் செய்து முடியுங்கள்.... உண்மையான காந்தியின் கனவு... கான் கிராஸ் இல்லாத இந்தியா என்ற நிலை வர வேண்டும்
Rate this:
Cancel
30-செப்-202221:06:14 IST Report Abuse
பேசும் தமிழன் எது எப்படியோ.... இத்தாலி மாஃபியா கும்பலுக்கு ஜால்ரா போடும் ஆள் தான் வெற்றி பெற போகிறார் அதுவும் கொஞ்ச காலத்துக்கு.... அப்புறம் சீத்தாராம் கேசரி அவர்களிடம் இருந்து.... பதவியை இத்தாலி மேடம் பிடுங்கியது போல்.... வெற்றி பெறும் நபரிடம் இருந்து... தட்டி பறிக்க போகிறா‌ர் இத்தாலி பப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X