கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்வு

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
புதுடில்லி: கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் 0.5 சதவீதத்தை உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், ரெப்போ வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் வரையிலான
Repo Rate, Increase, RBI, Governor, Shaktikanta Das, ஆர்பிஐ, ரிசர்வ் வங்கி, கவர்னர், சக்திகாந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதம், உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் 0.5 சதவீதத்தை உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.



மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், ரெப்போ வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 5 மாதங்களில் நான்காவது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக, வட்டி விகிதம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதற்கு முன், கொரோனாவுக்கு முந்தைய 2019 ஆகஸ்டில், வட்டி விகிதம் இதே 5.40 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதை விட அதிகமாக உயர்ந்துள்ளது. வட்டி விகிதம் அதிகரித்ததை அடுத்து, வீட்டுக் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டியும் அதிகரிக்கும். கடந்த 5 மாதங்களில் மட்டும் 1.4 சதவீதம் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-செப்-202218:59:46 IST Report Abuse
அப்புசாமி மக்களே, இவுங்களை நம்பி கார், ஊ வீலர், ஊடு, கல்விக்கடன், வங்கி கிட்டேருந்து கடன் வாங்கிறாதீங்க. எல்லாத்தையும்.பிடுங்கிக்.கொண்டு விட்டு விடுவார்கள்.
Rate this:
Cancel
30-செப்-202217:34:46 IST Report Abuse
அப்புசாமி இவருக்கு என்ன? செண்டிரல் கெவர்மெண்ட் எம்ப்ளாயி. அகவிலைப்படி, புறவிலைப்படி, சம்பள உயர்வு ந்னு இவிங்களே குடுத்துப்பாங்க. கேட்டா, அமெரிக்காவில் வட்டி விகிதம் ஏறிப்போச்சுன்னு காரணம் சொல்லுவாங்க.
Rate this:
Cancel
30-செப்-202214:59:00 IST Report Abuse
ஆரூர் ரங் அமெரிக்காவில் பணவீக்கம் 10 சதவீதத்துக்கு மேலே பறப்பதால் சில நாட்களுக்கு ஒருமுறை வட்டி விகிதத்தை உயர்த்திக் கொண்டே🤯🤯 இருக்கிறார்கள் . நிதிப்பற்றாக்குறையால் ஜெட் வேகத்தில்😇 டாலர் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவாக எல்லா நாடுகளிலிருந்தும் அமெரிக்க நிதி முதலீடுகள் வெளியேறுகின்றன. டாலருக்கு எதிரான எல்லா நாடுகளின் கரன்சிகளும் சரிந்து கொண்டிருக்கின்றன. இது உலகளாவிய சரிவு. உக்ரைன் போரால் வந்த வினை. இதற்காக நம் ரிசர்வ் வங்கி மீது பழி சுமத்துவது அபாண்டம். நம்மாலானவரை இறக்குமதிப் பொருட்களை நுகர்வதை கடுமையாக குறைத்தால்தான் நாடு தப்பிக்கும்.
Rate this:
30-செப்-202217:31:47 IST Report Abuse
அப்புசாமிசரிங்க... இந்திய மக்கள் நுகர்வதைக் குறைச்சுக்கறோம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X