அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்

Added : செப் 30, 2022 | |
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா வரும், நவ.,27ல், சுவாமி சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில், கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில், பஞ்சமூர்த்திகள், தினமும், வீதி உலா வந்து
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபம், திருவிழா, பந்தக்கால் முகூர்த்தம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.



திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா வரும், நவ.,27ல், சுவாமி சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில், கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில், பஞ்சமூர்த்திகள், தினமும், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். ஏழாம் நாள் விழாவில், டிச.,3ல், மகாரத ஓட்டம் நடக்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான, வரும் டிச.,6ல், அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறையில் எதிரில், பரணி தீபமும், மாலையில், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.



விழாவில், பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்தல், விழாவில் வீதி உலாவில், சுவாமி அலங்காரம் செய்யப்பட உள்ள வாகனங்கள், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும் தேர், பத்திரிசை அச்சடித்தல் உள்ளிட்ட பல்வேறு பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள, இன்று பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதை முன்னிட்டு, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி சன்னதி தங்க கொடி மரத்தில் அருகில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில், அதிகாலை, 5:30 மணிக்கு, கன்னியா லக்கினத்தில், மங்கல இசை ஒலிக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, ராஜ கோபுரம் முன்பு பந்தக்கால் நடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X