மதுரை: மதுரையில் நேற்று (செப்.,29) அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, ‛அமைச்சர் மூர்த்தி பிரமாண்டமாக மகன் திருமணத்தை நடத்தினார். இதற்கு எங்கிருந்து பணம் வந்தது? 30 கோடி ரூபாய் செலவில் ஆடம்பர திருமணம் நடத்தியுள்ளார்' என கூறியிருந்தார்.
இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‛எனது மகன் திருமணத்திற்கு ரூ.3 கோடி செலவு செய்துள்ளேன். அனைவரையும் சமமாக அமர வைத்து ரூ.1.5 கோடி செலவில் உணவு கொடுத்தேன்' என்றார்.