முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலம் தமிழகம்: முதல்வர்

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (69) | |
Advertisement
சென்னை: முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.செங்கல்பட்டில் பெக்ட்ரான் டெக்னாலஜி இந்தியா நிறுவனத்தின் நவீன தொழிற்சாலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தைவானை சேர்ந்த நிறுவனம் தமிழகத்தில் தொழிற்சாலையை திறந்துள்ளது. அந்நாட்டை சேர்ந்த பல நிறுவனங்கள், தமிழகத்தில் மேலும் பல
தமிழகம், தமிழ்நாடு, முதல்வர், ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின், முகஸ்டாலின்,  முதல்வர் முக ஸ்டாலின், தளபதி ஸ்டாலின், திமுக தலைவர் ஸ்டாலின், தொழிற்சாலை,  stalin, mkstalin, tamilnadu, cmstalin, cmotamilnadu,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



செங்கல்பட்டில் பெக்ட்ரான் டெக்னாலஜி இந்தியா நிறுவனத்தின் நவீன தொழிற்சாலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தைவானை சேர்ந்த நிறுவனம் தமிழகத்தில் தொழிற்சாலையை திறந்துள்ளது. அந்நாட்டை சேர்ந்த பல நிறுவனங்கள், தமிழகத்தில் மேலும் பல தொழிற்சாலைகளை துவங்க வேண்டும். புதிய தொழில் நிறுவனங்கள் உருவாக்குவதை ஊக்கப்படுத்தி வருகிறோம். ஸ்ரீபெரும்புதூர், ஓசூர் மற்றும் கோவை என்று மின்னணு உற்பத்தி மையங்கள் பெருகி வருகின்றன.



பெண்கள் பணிபுரிவதற்கு ஏதுவான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. அதிகமான பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழகம். இதற்காக அரசு பஸ்களில் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை கடமையாக செய்து வருகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. பெக்ட்ரான் மூலம் பெண்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.


latest tamil news



முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழகம். உற்பத்தியில், வர்த்தகத்தில், தொழிலில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்திய அளவில் வணிகம் செய்வதில் எளிதான மாநிலம் என்ற பட்டியலில் தமிழகம் இடம்பெற்றுள்ளது.



மின்னணுவியல் துறையை வளர்ந்து வரும் துறையாக தமிழக அரசு வகைப்படுத்தி உள்ளது. அந்த துறையில் ஏராளமான உற்பத்தி திட்டங்களை தமிழக அரசு ஈர்த்துள்ளது. 2030க்குள் தமிழக பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்பது எங்களது லட்சியம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkataraman - New Delhi,இந்தியா
30-செப்-202223:27:23 IST Report Abuse
Venkataraman பெரிய முதலீடுகளும் தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்று விரும்பும் ஸ்டாலின் அவர்கள் இந்தி படிக்கக் கூடாது என்பதும் வடமாநிலத்தவர்கள் தமிழகத்திற்கு வந்து வேலை செய்யக்கூடாது என்பதும் ஏன்? ஸ்டெர்லைட் ஆலையை மூடச்செய்த திமுகவினர் அந்த ஆலையின் முதலாளி இப்போது மிகப்பெரிய எலக்ட்ரானிக் கருவிகளை உற்பத்தி செய்யும் ஆலை ஒன்றை குஜராத் மாநிலத்தில் அமைத்திருப்பது பற்றி அறிவார்களா?
Rate this:
Cancel
Vijay - Chennai,இந்தியா
30-செப்-202222:52:22 IST Report Abuse
Vijay இந்த விஷயம் முதலீட்டாளர்களுக்கு தெரியுமா ?
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
30-செப்-202222:33:37 IST Report Abuse
Desi கஞ்சா, போதை பொருள்கள் முதலீட்டார்கள் விரும்பும் மாநிலமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X