சவால்களை இணைந்து சமாளிப்போம்: அனில் சவுஹான் உறுதி

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹான் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர், அனைத்து சவால்களையும் முப்படைகளும் இணைந்து சமாளிக்கும் என்றார்.ராணுவம், கடற்படை, விமானம் உள்ளிட்ட முப்படைகளுக்கும் தலைமை வகிக்கும் உயரிய பொறுப்பான முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவி 2020ல் உருவாக்கப்பட்டது. முதல் தலைமை
CDS, Anil Chauhan, Triforce, முப்படை தலைமை தளபதி,  அனில் சவுஹான், CDS Anil Chauhan,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹான் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர், அனைத்து சவால்களையும் முப்படைகளும் இணைந்து சமாளிக்கும் என்றார்.



latest tamil news


ராணுவம், கடற்படை, விமானம் உள்ளிட்ட முப்படைகளுக்கும் தலைமை வகிக்கும் உயரிய பொறுப்பான முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவி 2020ல் உருவாக்கப்பட்டது. முதல் தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் பொறுப்பேற்றார்.



தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் அருகே கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட, 13 பேர் உயிரிழந்தனர். அவர் உயிரிழந்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய தலைமை தளபதி நியமிக்கப்படாமலேயே இருந்தது.



latest tamil news


இந்நிலையில், முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹானை நியமிப்பதாக மத்திய அரசு நேற்று முன்தினம் (செப்.,28) அறிவித்தது.தொடர்ந்து, இன்று அனில் சவுஹான் முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்று கொண்டார். தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். அப்போது, முப்படைகளின் தளபதிகள் உடன் இருந்தனர்.



latest tamil news


பின்னர் அவர் கூறுகையில், இந்திய ஆயுதப்படைகளின் மிக உயர்ந்த பதவியை ஏற்றுக்கொள்வதில் பெருமையாக உள்ளது. முப்படை தலைமை தளபதி என்ற முறையில் 3 படைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சி செய்வேன். அனைத்து சவால்கள், சிக்கல்களை இணைந்து சந்தித்து சமாளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news




இதனை தொடர்ந்து, டில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடம் சென்ற அனில் சவுஹான், வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.



கடந்த 1961, மே 18ல் பிறந்த அனில் சவுஹான், நம் ராணுவத்தின் கூர்கா ரைபிள்ஸ் படைப்பிரிவில் 1981ல் பணியில் சேர்ந்தார். ஜம்மு - காஷ்மீரின் மிக கடுமையான பாராமுல்லா பகுதியில், வடக்கு படைப்பிரிவில் காலாட்படையின் மேஜர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார். வடகிழக்கு படைப்பிரிவில் லெப்டினன்ட் ஜெனரலாகவும், கிழக்கு படைப்பிரிவில் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் - இன் - சீப் ஆகவும் பணியாற்றி உள்ளார்.



இவர், 2021, மே மாதம் பணி ஓய்வு பெற்றார். சிறப்பான ராணுவப்பணிக்காக பரம் வசிஷ்ட் சேவா, உத்தம் யுத் சேவா உட்பட பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30-செப்-202220:43:52 IST Report Abuse
Ramesh Sargam முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுஹான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Mohan - COIMBATORE,இந்தியா
30-செப்-202214:22:45 IST Report Abuse
Mohan ஆமா சாமீ ...சும்மா பூந்து விலாடனும் ....எங்க CDS விட ஒரு மடங்கு நீக்க இருக்கணும்னு எதிர்பாக்குறோம் ...சீனாக்காரன் இதுக்கு CDS சே பரவால்லைங்கற மாதிரி இருக்கனும் ஒவ்வொரு நகர்வும்....எதாவது நாட்டுல காங்கிரஸ் காரன் மாதிரி ஆளுங்க வந்த நீங்க ஆட்சியை புடுச்சுருங்க ...உங்க கட்டுப்பாட்டுல வெச்சிக்கிங்க ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X