காந்திநகர் டு மும்பை ‛வந்தே பாரத் ரயில்': கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர்

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (37) | |
Advertisement
காந்திநகர்: நாட்டின் 3வது வந்தே பாரத் ரயிலான காந்திநகர் - மும்பை வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை பிரதமர் மோடி இன்று (செப்.,30) கொடியசைத்து துவக்கி வைத்தார்.பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டம் நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் பிரதமர் மோடி
PM Modi, Vande Bharat Express,  பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயில், காந்திநகர், மும்பை, Railway, Gandhi nagar, Mumbai,

காந்திநகர்: நாட்டின் 3வது வந்தே பாரத் ரயிலான காந்திநகர் - மும்பை வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை பிரதமர் மோடி இன்று (செப்.,30) கொடியசைத்து துவக்கி வைத்தார்.பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டம் நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் பிரதமர் மோடி வெளியிட்டார்.அதன்படி, புதுடில்லி - வாரணாசி மற்றும் புதுடில்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் நாட்டின் 3வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.latest tamil news


இந்த ரயில் குஜராத் தலைநகர் காந்தி நகரில் இருந்து மும்பை சென்ட்ரல் வரை இயக்கப்படுகிறது. இது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் சென்னை ஐ.சி.எப்.,பில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு பின்னர் ஆமதாபாத் மெட்ரோ ரயிலில் கலுபூர் நிலையத்தில் இருந்து தூர்தர்ஷன் கேந்திரா நிலையம் வரை பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர்.


latest tamil news


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-அக்-202215:13:09 IST Report Abuse
राजा இந்த வந்தே பாரத் ரயிலில் வியாபாரிகள் தொல்லை உண்டா? நீங்கள் ஒரு முறை மாறுவேடத்தில் முன் பதிவு செய்யப்பட்ட சாதாரண வகுப்பில் பயணம் செய்து பாருங்கள் பயணிகள் எத்தனை இன்னல்களை சந்திக்கிறார்கள் என்று. ரிசர்வ் செய்தாலும் நம்ம இருக்கை நமக்கு நிச்சயம் இல்லை. சாதாரண டிக்கெட்டை வைத்துக்கொண்டு முற்பதிவு பட்டியலில் ஏறி கூட்டம் போடுகிறார்கள் கழிப்பறைகளுக்கு செல்வதற்கு கூட வழியில்லாமல் உட்கார்ந்து இருப்பார்கள்...கழிப்பறைகளின் துர்நாற்றம்....வேலை செய்யாத கழிப்பறைகளில் சாதனங்கள், தண்ணீர் வராத படிப்பறைகள்,இதையெல்லாம் நீங்களும் அனுபவிக்க வேண்டும்....ஒரு முறை மாறு வேடத்தில் பயணம் செய்து பாருங்கள்..... பயணிகளுக்கு இப்படிப்பட்ட இன்னல்களில் இருந்து விடுதலை வாங்கி கொடுங்கள்...
Rate this:
Cancel
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
01-அக்-202208:48:46 IST Report Abuse
HONDA வந்தே பாரத் சென்னைக்கு கிடையாதா
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
02-அக்-202201:14:25 IST Report Abuse
Aarkayமத்திய அரசின் எந்த திட்டம் இங்கு வந்தாலும் எதிர்ப்போம். ஹிந்தி தெரியாது போடா என்போம் என்னவோ, coding, GK, accounting, auditing, engineering உட்பட மற்ற எல்லாமும் தெரிந்தால் போல. உண்மையில், எங்களுக்கு தமிழே சரியாக தெரியாது. நாலு திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம் சொல்ல சொன்னால், நடையை கட்டிவிடுவோம் டாஸ்மாக் பக்கம்....
Rate this:
Cancel
01-அக்-202207:38:37 IST Report Abuse
அப்புசாமி ரயிலில் போகும்போது அந்த ரீங்காரமான சத்தம். ஸ்டேஷன்களில் புகுந்து புறப்படும்போதும் தண்டவாளங்கள் மாறும்போது ஏற்படும் ஒலி ஆனந்தம். இதெல்லாம் அனுபவிச்சவங்களுக்கு தெரியும். சொகுசு ரயில்களில் இறுக்கமாக உக்காந்துக்கிட்டு சக மனிதர்களுடன் பேசக்கூட முடியாமல் என்ன பயணம்? காசு குடுத்து தேள் கடி பட்ட மாதிரி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X