லாரி மோதி சிறுவன் பலி

Added : செப் 30, 2022 | |
Advertisement
மயிலாடுதுறை: சீர்காழி அருகே நெல் ஏற்றச் சென்ற லாரி மோதியதில் சிறுவன் பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவாலி, மேலபாதி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷின் மகன் மதன்,13. அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளிக்கு செல்லாத மதன், உறவினரான மருதம்பள்ளம் சுந்தர்ராஜன் மகன் கிருபானந்தம்,26,
லாரி மோதி சிறுவன் பலி

மயிலாடுதுறை: சீர்காழி அருகே நெல் ஏற்றச் சென்ற லாரி மோதியதில் சிறுவன் பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.



மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவாலி, மேலபாதி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷின் மகன் மதன்,13. அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளிக்கு செல்லாத மதன், உறவினரான மருதம்பள்ளம் சுந்தர்ராஜன் மகன் கிருபானந்தம்,26, என்பவருடன் டூவீலரில் பின்னால் அமர்ந்து கடைவீதிக்கு சென்றுள்ளார்.



அப்போது திருவாலி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரே சீர்காழியிலிருந்து திருவாலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்றுவதற்காக அதிவேகமாக வந்த லாரி மோதியதில் மதன் சம்பவ இடத்திலேயே உடல் நசுக்கி உயிரிழந்தார். கிருபானந்தம் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.



இது குறித்து தகவல் அறிந்த திருவெண்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X