ஓராண்டில் ரூ.1 லட்சத்திற்கு ரூ.40 ஆயிரம் ரிட்டர்ன்: ரெலிகேர் வழங்கும் முதலீட்டு டிப்ஸ்!

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | |
Advertisement
ரெலிகேர் புரோக்கிங் நிறுவனம் நவராத்திரியை ஒட்டி தினம் ஒரு பங்கு பரிந்துரையினை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான எச்.சி.எல்லில்., நீண்ட கால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்கு 40 சதவீதம் வரை ரிட்டர்ன் வழங்கும் என தெரிவித்துள்ளது.ரெலிகேர் நிறுவனம் கூறியுள்ளதாவது: எச்.சி.எல்., நிறுவனம் இன்று உலகலாவிய தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது.
Stock Ideas, Stock Market, HCL Tech Shares, பங்குச்சந்தை, Nifty, Sensex, NSE, BSE

ரெலிகேர் புரோக்கிங் நிறுவனம் நவராத்திரியை ஒட்டி தினம் ஒரு பங்கு பரிந்துரையினை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான எச்.சி.எல்லில்., நீண்ட கால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்கு 40 சதவீதம் வரை ரிட்டர்ன் வழங்கும் என தெரிவித்துள்ளது.

ரெலிகேர் நிறுவனம் கூறியுள்ளதாவது: எச்.சி.எல்., நிறுவனம் இன்று உலகலாவிய தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது. தொழில்களை டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க எச்.சி.எல்., பல்வேறு நிறுவனங்களுக்கு உதவுகிறது. ஐடி மற்றும் வணிகச் சேவைகள், பொறியியல் மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டுச் சேவைகள், மென்பொருள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் என மூன்று வணிகப் பிரிவுகள் மூலம் ஒருங்கிணைந்த போர்ட்போலியோவை கொண்டுள்ளது. பல்வேறு தொழில்துறைகளில் அடுத்தத் தலைமுறை தொழில்நுட்பங்களுக்கு நிலையான தேவை இருப்பதால், கடந்த 2 ஆண்டுகளில் எச்.சி.எல்., நிறுவனம் தனது மென்பொருள் சேவைத் தொழிலை பலப்படுத்தியுள்ளது.


latest tamil news


தனது திறன்களைத் தாண்டி, வாடிக்கையாளர்களுக்கு தீர்வுகளை வழங்க அமேசான் வெப் சர்வீசஸ், ஐபிஎம், மைக்ரோசாப்ட், கூகுள் கிளவுட், டெல், சிஸ்கோ, அடோப் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் எச்.சி.எல்., ஒப்பந்தம் செய்துள்ளது. மார்ச் 2022 உடன் முடிந்த நிதியாண்டில் இந்நிறுவனம் சேவைகள் மூலமாக 88 சதவீத வருவாய் ஈட்டியுள்ளது. 2020 முதல் 2022 வரையிலான 2 நிதியாண்டுகளில் நிறுவன சி.ஏ.ஜி.ஆர்., வளர்ச்சி 10.6 சதவீதமாக இருக்கிறது. 2024 வரையிலான அடுத்த 2 நிதியாண்டுகளில் இது 15.2 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துவதில் நிறுவனம் கவனம் செலுத்தி இந்த வளர்ச்சியை பெறும். டிஜிட்டல் சேவைகளுக்காக உலகளாவிய நிறுவனங்கள் தொடர்ந்து அதிகம் செலவிடும் என துறையின் போக்கு காட்டுகிறது.


latest tamil news


இது எச்.சி.எல்., போன்ற நிறுவனங்களுக்கு அதிக ஒப்பந்தங்களை பெற வாய்ப்பு வழங்குகிறது. திறமையான பணியாளர்கள், முழுமையான டிஜிட்டல் சேவை வழங்கல் மற்றும் தொடர்ந்து திறமையான பணியாளர்களை வேலைக்கு எடுப்பது ஆகியவை சாதகமானதாக இருக்கும். 2023 நிதியாண்டில் நிறுவனம் தங்களது வருவாய் வளர்ச்சி நிலையான கரன்சி மதிப்பு 12 - 14 சதவீதம் இருக்கும் என்றது. அதே சமயம் EBIT மார்ஜின் 18 - 20 சதவீதத்திற்குள் இருக்கும் என்கிறது. இதற்கிடையே நிறுவனத்தின் கவனம் பணியாளர்கள் வேறு நிறுவனம் தாவுவதை நிர்வகிப்பது மற்றும் பணியாளர்களுக்கான செலவுகளை கட்டுக்குள் வைப்பதில் இருக்கும்.


latest tamil news


நிறுவன மதிப்பின் படி பார்த்தால் எச்.சி.எல்., தற்போது (பங்கு ஒன்றின் விலை ரூ.927) பிற ஐடி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் முதலீட்டுக்கு ஏற்ற விலையில் வர்த்தகமாகிறது. தற்போதைய விலையில் வாங்க பரிந்துரைக்கிறோம். அடுத்த 9 முதல் 12 மாதங்களில் ரூ.1,333 என்ற இலக்கை அடையும். இவ்வாறு கூறியுள்ளது. அதன் படி ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.43 ஆயிரம் வரை ரிட்டர்ன் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு: பங்கு வர்த்தகம், முதலீடு தொடர்பாக நிபுணர்கள், புரோக்கிங் நிறுவனங்கள் வழங்கும் பரிந்துரைகள், கருத்துக்கள் அவர்களுடையவை. தினமலரின் கருத்துக்கள் அல்ல. பங்கு முதலீடுகள் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X