பஞ்சாப் முதல்வர் கான்வாயில் 42 கார்கள்: எதிர்க்கட்சிகள் கண்டனம்

Updated : அக் 01, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் கான்வாயில் 42 கார்கள் உள்ளது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. முந்தைய முதல்வர்களை விட அதிகமாக கான்வாய் உள்ளதாக கூறப்படும் நிலையில், தேர்தலுக்கு முன்பு இது குறித்து விமர்சித்த பக்வந்த் மன் தற்போது தனது பேச்சிற்கு மாறாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.பக்வந்த் மன் கான்வாய் குறித்து தகவல் அறியும் அறியும்
bagwantmann, punjab, chiefminister, cm, convey, aam adhmi, aam admi, பக்வந்த் மான், கான்வாய், முதல்வர், பஞ்சாப், காங்கிரஸ், ஆம் ஆத்மி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் கான்வாயில் 42 கார்கள் உள்ளது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. முந்தைய முதல்வர்களை விட அதிகமாக கான்வாய் உள்ளதாக கூறப்படும் நிலையில், தேர்தலுக்கு முன்பு இது குறித்து விமர்சித்த பக்வந்த் மன் தற்போது தனது பேச்சிற்கு மாறாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.பக்வந்த் மன் கான்வாய் குறித்து தகவல் அறியும் அறியும் சட்டத்தின் கீழ் அறிக்கை பெறப்பட்டது. அதில், முதல்வர் பக்வந்த் மான் கான்வாயில் 42 கார்கள் உள்ளன. இது முன்னாள் முதல்வர்கள் பிரகாஷ் சிங் பாதல், அமரீந்தர் சிங், சரண்ஜித் சிங் சன்னி கான்வாயை விட அதிகம் எனக்கூறப்பட்டது.இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. பிரகாஷ் சிங் பாதல் முதல்வராக இருந்த போது(2007 - 2017) கான்வாயில் 33 கார்கள் இருந்தன. அமரீந்தர் சிங் முதல்வராக இருந்த போதும் அதில் எந்தவித மாற்றம் இல்லை. சரண்ஜித் சிங் முதல்வராக இருந்த போது 6 கார்கள் சேர்க்கப்பட்டு 39 கார்கள் இடம்பெற்றன. ஆனால், தன்னை ஆம் ஆத்மி எனக்கூறிக்கொள்ளும் பக்வந்த் மான் முதல்வரான பின்பு கான்வாயில் 42 கார்கள் உள்ளது தெரியவந்துள்ளது.latest tamil news


முதல்வராக இருந்து விமர்சனம் செய்ததற்கும், முதல்வரான பிறகு அவரது நடவடிக்கைகளுக்கும் முரண்பாடுகள் உள்ளன. அவர் எம்.பி.,யாக இருந்த போது, ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களை, கான்வாய் குறித்து கடுமையாக விமர்சித்தார். மிகப்பெரிய கான்வாய் அமைக்கும் அளவிற்கு என்ன காரணம் வந்தது என மக்களிடம் விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து பக்வந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் பதிலளிக்கவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
01-அக்-202201:02:43 IST Report Abuse
Aarkay திட்டங்கள் இவர்களிடம் ஏதும் உள்ளதோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், விளம்பரங்கள் மட்டும் அமோகம்.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
30-செப்-202221:40:07 IST Report Abuse
madhavan rajan கெஜ்ரிவால் திராவிட மாடல் தலைவரிடம் பயிற்சி எடுத்திருப்பார் என்று தெரிகிறது. பொய் வாக்குறுதிகள், முடியாத இலவசங்கள் அறிவித்தல் போன்றவற்றை செய்து ஆட்சியை பிடித்து பிறகு தான்தோன்றித்த தனமாக செயல்படுவதில் அவர் குருநாதரை காப்பியடிக்கிறார். விரைவில் அங்கும் எங்காவது பேனா, பென்சில் போன்றவற்றிற்கு சிலை அமைக்கப்படலாம்.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
30-செப்-202221:07:48 IST Report Abuse
Ram அங்கும் திராவிட மாடலா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X