முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், ‛ஜெயக்குமார்
Former Minister, Jayakumar, Quashed, Case, ஜெயக்குமார்

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், ‛ஜெயக்குமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி கடந்த 2014ம் ஆண்டு எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, எனது தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்தார்.



மேலும் தொழிற்சாலை பூட்டி, அபகரித்துக் கொண்டார். நான் பல முறை எனது தொழிற்சாலையை திறக்க முயன்றும் ஜெயக்குமார், நவீன், ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா தரப்பு எனக்கு அச்சுறுத்தல் கொடுத்தும், தகராறு செய்தும் வருகின்றனர்' என சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து மகேஷ் புகார் அளித்தார்.



அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மத்தியக் குற்றப்பிரிவுக்கு சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, ஜெயக்குமார், ஜெயப்பிரியா, நவீன் ஆகிய 3 பேர் மீது 6 பிரிவுகளில் மத்திய குற்றப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மூவரும் மனு தாக்கல் செய்தனர். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று (செப்.,30) நீதிபதி இளந்திரையன், ஜெயக்குமார், ஜெயப்பிரியா, நவீன் ஆகியோர் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
01-அக்-202204:42:25 IST Report Abuse
Girija இப்படி போலீசையும், கோர்ட்டையும் அலைக்கழித்து , அவர்கள் நேரத்தை கெடுத்ததற்கு அபராதம் இல்லையா ? பொதுநல வழக்கு போட்டால் மட்டும் அபராதமா?
Rate this:
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
01-அக்-202202:35:40 IST Report Abuse
பிரபு காளை வயசு, கட்டான சைசு, களங்கமில்லா மனசு - அவரைப்போயி குற்றம் சொல்றீங்களே.
Rate this:
Cancel
kijan - Chennai,இந்தியா
30-செப்-202222:48:54 IST Report Abuse
kijan இவர் நீல விஷயங்களில் தானே ஆர்வம் காட்டுவார் ...இப்போ நில விஷயங்களிலும் வந்துவிட்டாரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X