நவ.,6ல் ஆர்.எஸ்.எஸ் பேரணி: அனுமதி அளித்தது உயர்நீதிமன்றம்

Updated : அக் 01, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (45) | |
Advertisement
சென்னை: அக்டோபர் 2ம் தேதி சட்டம் ஒழுங்கு பிரச்னையால் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், நவம்பர் 6ம் தேதி பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இப்பேரணிக்கு அனுமதி தராவிட்டால், காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த
RSS rally, TNGovt,  Chennai High Court, Permission, TN Police, ஆர்எஸ்எஸ்,  பேரணி, தமிழக அரசு, சென்னை ஐகோர்ட், அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அக்டோபர் 2ம் தேதி சட்டம் ஒழுங்கு பிரச்னையால் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், நவம்பர் 6ம் தேதி பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இப்பேரணிக்கு அனுமதி தராவிட்டால், காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.



தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அக்டோபர் 2ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிட சில மாவட்டங்களில் போலீஸ் அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அக்.,2ல் நடைபெற இருக்கும் அனைத்து பேரணி, நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்க முடியாது என போலீஸ் மற்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



latest tamil news


இதனைத்தொடர்ந்து தமிழக அரசு மற்றும் காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு முறையீடு செய்தது. மேலும், தமிழக போலீஸ் தரப்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் இன்று (செப்.,30) விசாரணைக்கு வந்தது. அப்போது, ‛அக்டோபர் 2ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது' என போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.



இந்நிலையில், அக்.,2க்கு பதிலாக நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நவ,6ம் தேதி பேரணிக்கு அக்.,31க்குள் அனுமதி தராவிட்டால், காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி அய்யர்   பாலக்காடு வெயில் இல்லாத குளு குளு குளிர்ந்த சீசன் நவம்பரில் R S S பேரணி ~ நன்றாக உள்ளது
Rate this:
Cancel
Nirmal susai - sydney,ஆஸ்திரேலியா
01-அக்-202203:47:56 IST Report Abuse
Nirmal susai நாட்டில் நிலவும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து இந்த கூட்டம் பாராட்ட ஊர்வலம் எப்போது
Rate this:
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
01-அக்-202217:09:22 IST Report Abuse
MARUTHU PANDIARதலைக்கு மேல் பல லட்சம் கோடி கடனை வாங்கி,எப்படி எப்போது அடைக்கப் போகிறோம் என்று தெரியாமல் அம்பது ரூபாய் ரேட்டில்,, நாலு வேளை தின்பதை விட, கடன் வாங்காமல் நூறு ரூபாய்க்கு கவுரவமாக இரண்டு வேளை தின்பது , நாளைக்கு தெருவில் நிற்காமல் பாது காக்கும்....
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
02-அக்-202201:22:28 IST Report Abuse
Aarkayபெட்ரோல் டீசல் விலை ஸ்டெடியாகத்தானே இருக்கிறது. ஏதாவது உளறினாத்தான் பேமெண்ட் கிடைக்குமா? எல்லாம் வயிற்று பிழைப்பு பாவம் புள்ள...
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
01-அக்-202200:58:30 IST Report Abuse
Aarkay குருமாவும் இப்போது ஆரம்பித்து விடுவாரே நானும் கிளம்புகிறேன் என்று.... His master's voice உண்மையில் எந்த கூட்டத்தை பார்த்து மக்கள் அலறுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X