கழிவறை தொட்டியில் விழுந்து சிறுமிகள் பலி: 2 பேர் சஸ்பெண்ட்

Added : செப் 30, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
தேனி: தேனி மாவட்டம் பண்ணைபுரம் பேரூராட்சி கழிவறை தொட்டியில் 2 சிறுமிகள் தவறி விழுந்தனர். ஒரு சிறுமி சம்பவ இடத்திலேயேயும், மற்றொரு சிறுமி மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதற்கு பலத்த கண்டனம் தெரிவித்தும், சிறுமிகளின் உடலை வாங்க மறுத்தும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கழிவறை தொட்டி குறித்து பல முறை பேரூராட்சியில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை
சிறுமிகள், தேனி, கழிவறை தொட்டி, Girls, Theni, Toilet Tank

தேனி: தேனி மாவட்டம் பண்ணைபுரம் பேரூராட்சி கழிவறை தொட்டியில் 2 சிறுமிகள் தவறி விழுந்தனர். ஒரு சிறுமி சம்பவ இடத்திலேயேயும், மற்றொரு சிறுமி மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதற்கு பலத்த கண்டனம் தெரிவித்தும், சிறுமிகளின் உடலை வாங்க மறுத்தும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கழிவறை தொட்டி குறித்து பல முறை பேரூராட்சியில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், கோட்டாட்சியர் விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பேரூராட்சியின் செயல் அலுவலர் முனுசாமி, இளநிலை பொறியாளர் வீரமணி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
30-செப்-202222:22:33 IST Report Abuse
Mohan ஒன்லி சஸ்பென்ட் (இதுல ஏதோ சஸ்பென்ஸ்). நோ டிஸ்மிஸ் (இதுல ஏதோ காம்ப்ரமைஸ்).
Rate this:
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
30-செப்-202221:13:26 IST Report Abuse
chinnamanibalan எந்த ஒரு உள்ளூராட்சி அமைப்புகளிலும் கமிஷன் இல்லாத பணியே இல்லை என்றாகி விட்ட நிலையில், பெரும்பாலும் கழிவுநீர் செல்லும் வழிகள் மற்றும் கழிப்பிட தொட்டிகளில் மேல் மூடிகள் இல்லாத நிலையே உள்ளது. எனவே ஊழல் புரியும் அதிகாரிகள் முதலில் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் இது போன்ற துயரங்கள் தொடரவே செய்யும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30-செப்-202219:11:31 IST Report Abuse
Ramesh Sargam இதுபோன்ற தரமில்லாத கட்டுமானங்கள் கட்டுபவர்களை முதலில் தண்டிக்க வேண்டும். அவர்களுக்கே பணி கொடுக்கும் அரசில் உள்ள அதிகாரிகளையும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் தண்டிக்கப்படவேண்டும். இந்த 'இடமாற்றம்' என்பது ஒரு தண்டனையே அல்ல. அது ஒரு தற்காலிக கண் துடைப்பு. அவ்வளவுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X