விலைவாசி குறைய 2 ஆண்டுகள் ஆகும்: ஆர்.பி.ஐ., கவர்னர்

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
பல்வேறு காரணிகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் நீடிப்பதால் விலைவாசி விகிதம் 4 சதவீதம் என்ற இலக்கை எட்டுவதற்கு இரண்டு வருடங்கள் ஆகலாம் என ஆர்.பி.ஐ., கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.உலகளவில் விலைவாசி உயர்வு தற்போது பெரும் பிரச்னையாக உள்ளது. அதனை சமாளிக்க உலக நாடுகள் திணறி வருகின்றன. கோவிட் அலைகள் பொருளாதாரத்தை பாதித்திருந்த நிலையில், பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்ய -
Inflation, விலைவாசி, RBI, வட்டிவிகிதம், ரெப்போரேட்

பல்வேறு காரணிகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் நீடிப்பதால் விலைவாசி விகிதம் 4 சதவீதம் என்ற இலக்கை எட்டுவதற்கு இரண்டு வருடங்கள் ஆகலாம் என ஆர்.பி.ஐ., கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.

உலகளவில் விலைவாசி உயர்வு தற்போது பெரும் பிரச்னையாக உள்ளது. அதனை சமாளிக்க உலக நாடுகள் திணறி வருகின்றன. கோவிட் அலைகள் பொருளாதாரத்தை பாதித்திருந்த நிலையில், பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்ய - உக்ரைன் போர் நிலைமையை மேலும் மோசமாக்கியது. போரினால் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன. இதனால் பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகள் உயர்ந்து அனைத்து பொருட்களின் மீது அழுத்தத்தை அதிகரித்தது. இந்தியாவில் ஆகஸ்ட் மாத பணவீக்கம் 7 சதவீதமாக உள்ளது.


latest tamil news


பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதால் டாலர் வலுப்பெறுகிறது. அதற்கு எதிராக அனைத்து நாடுகளின் பண மதிப்பும் விழுகிறது. டாலரில் உலக வர்த்தகம் நடப்பதால் அந்நியச் செலாவணி பற்றாக்குறை விரிவடைந்து செல்கிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.5% உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரெப்போ வட்டி 5.9% நிலையை அடைந்துள்ளது.

ரெப்போ வட்டி உயர்வுக்கு பின்னர் ஆர்.பி.ஐ., கவர்னர் சக்திகாந்த தாஸ் பணவீக்கம் குறித்து பேசினார். 2 ஆண்டுகளுக்குள் பணவீக்கம் 4% என்ற ஆர்.பி.ஐ.,யின் இலக்கை நெருங்கும் என எதிர்பார்ப்பதாகவும், மீண்டும், பல நிச்சயமற்ற தன்மைகள் உள்ளன, அவை அவ்வப்போது எழுகின்றன என்றும் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-அக்-202217:28:36 IST Report Abuse
அப்புசாமி அதுக்குள்ளாற ரெண்டு சம்பள உயர்வு, நாலு பஞ்சப்படி இவிங்க சம்பளம் ஒசந்துடும். நடத்துங்க.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
01-அக்-202204:52:08 IST Report Abuse
Girija பதவி நீட்டிப்பு கிடைக்கவில்லையா? எதுக்கு தீடிர்னு ஹாக்கி ஸ்டிக் ஐ கால்களின் நடுவில் நுழைக்கிறார் ?
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-அக்-202201:06:06 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இதுவே நிதியமைச்சரின் கருத்துமா, இல்லை எப்பவும் போல அந்த அமைச்சருக்கு இதெல்லாம் தெரியாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X