சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23) சீரிஸ் டிசைன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் வளர்ச்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. எம், ஏ, எஸ் என பல்வேறு சீரிஸ்களின் அடிப்படையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் அடுத்ததாக அறிமுகப்படுத்த இருக்கும் எஸ்23 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
![]()
|
முன்னதாக கேலக்ஸி எஸ்23 ஸ்டாண்டர்டு மற்றும் ப்ரோ மாடல் விவரங்களை வெளியிட்ட ஸ்டீவ் ஹெமர்ஸ்டோபர் எனும் டிப்ஸ்டர் இம்முறை கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா விவரங்களை வெளியிட்டு இருக்கிறார்.
![]()
|
அவர் வெளியிட்ட தகவலின் படி, அதன்படி புதிய கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா தோற்றத்தில் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த தோற்றம், டிஸ்ப்ளே, கேமரா மாட்யுல், எஸ் பென் மற்றும் இதர அம்சங்கள் முந்தைய மாடலில் வழங்கப்பட்டு இருந்ததை போன்றே இடம்பெற்று இருக்கிறது.
![]()
|
கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். அதோடு வழக்கமான பஞ்ச் ஹோல் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் 200 எம்பி முதன்மை கேமரா உள்ளிட்ட ஐந்து கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், புதிய கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா முந்தைய மாடலை விட அளவில் சற்று பெரியதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.