காங்., தலைவராக மட்டும் ஆசை: இந்திய மேப் தெரியாத கொடுமை; சசி தரூர் செய்த கூத்து

Updated : அக் 01, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூர், தனது வாக்குறுதிகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். அதில் இருந்த இந்திய 'மேப்'பில் காஷ்மீரின் பாதி பகுதிகள் மற்றும் லடாக் ஆகியவை இடம்பெறாதது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கவனித்த பின்னர், அந்த பக்கம் சரி செய்யப்பட்டு புதிதாக வெளியிடப்பட்டது.காங்கிரஸ் அதிருப்தி குழு என அழைக்கப்படும்
congress, Shashi Tharoor, india map, kashmir, காங்கிரஸ், சசிதரூர்,  மேப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூர், தனது வாக்குறுதிகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். அதில் இருந்த இந்திய 'மேப்'பில் காஷ்மீரின் பாதி பகுதிகள் மற்றும் லடாக் ஆகியவை இடம்பெறாதது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கவனித்த பின்னர், அந்த பக்கம் சரி செய்யப்பட்டு புதிதாக வெளியிடப்பட்டது.காங்கிரஸ் அதிருப்தி குழு என அழைக்கப்படும் 'ஜி23'ல் இடம்பெற்றிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதற்காக டில்லி சென்று சோனியாவை சந்தித்த சசி தரூர், கட்சி மேலிடம் நடுநிலை வகிக்கும் எனக்கூறியுள்ளார். ஆனால், மேலிடத்தின் ஆசியுடன் மல்லிகார்ஜூன் கார்கே களமிறக்கப்பட்டு உள்ளார்.


latest tamil newsஇந்நிலையில், டில்லி சென்ற சரூ தரூர் தேர்தல் நடத்தும் குழுவினரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர், கட்சியினருக்கு தனது வாக்குறுதிகள் அடங்கிய புத்தகத்தை சசி தரூர் வெளியிட்டார். அதை பார்த்த கட்சியினர் மற்றும் பத்திரிகை நிருபர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த மேப்பில், காஷ்மீரின் சில பகுதிகள், லடாக் ஆகியவை இடம்பெறவில்லை. இது அங்கிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பலரும் சசி தரூருக்கு எதிர்ப்பு தெரிவிக்க துவங்கினர். இதனையடுத்து, அந்த மேப்பை நீக்கிவிட்டு, புதிய வரைபடத்தை சசிதரூர் அலுவலகம் வெளியிட்டது.


latest tamil newsவேட்புமனு தாக்கல் செய்த சசி தரூர் கூறுகையில், நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களும் முறையாக நடக்கவில்லை. ரூபாய் நோட்டு வாபஸ், வேலைவாய்ப்பின்மை, மற்றும் பணவீக்கம் ஆகியன நிலவுகிறது. அதில், காங்கிரசால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும். மல்லிகார்ஜூன் கார்கே வேட்புமனு தாக்கல் செய்வது வரவேற்கத்தக்கது. கட்சியின் நலனுக்காக இன்னும் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வர வேண்டும். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து பின்வாங்க போவதில்லை. நாடு முழுவதும் என்னை ஆதரிக்கும் தொண்டர்களை கைவிட மாட்டேன்.இவ்வாறு சசி தரூர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
02-அக்-202207:16:27 IST Report Abuse
Ravichandran Narayanaswamy இந்திரா காந்தி Feroze Jahangir Ghandy என்பவரை மணந்து கொண்டு அதை இந்தியர்களை ஏமாற்ற அவர் பெயரை பெரோஸ் காந்தி என்று மாற்றி தகிடுதத்தம் செய்தது கான்-கிராஸ் ஊழல் கட்சி. அது இன்றும் தொடர்ந்து நேருவின் குடும்பம் காந்தியின் வழிவந்தவர்கள் போல காட்டிக்கொள்கிறார்கள். மக்களை ஏமாற்றலாம். அதற்கு நேருவின் பெயரை பயன்படுத்தினால் வியாபாரமாகாது என்று காந்தியின் பெயரை பயன்படுத்தலாமா? இப்போது சோனியா காந்தி இருப்பது இந்திரா கான்-கிராஸ் கட்சி. தேசத்தந்தை காந்தி சுதந்திரத்திற்கு பிறகு இந்தியன் நேஷனல் காங்கிரஸ் கட்சியை ரத்து செய்ய சொன்னார். இந்த ஊழல் கான்-கிராஸ் காட்டுமிராண்டிகள் அந்த கட்சியை ரத்து செய்யாமல் இவர்கள் தான் நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள் போல காட்டிக்கொள்கிறார்கள். மொத்தத்தில் கான்-கிராஸ் கட்சி காந்தியின் பெயரை தவறுதலாக பயன்படுத்துகிறது. பாவம் "உண்மையான" காந்தி.
Rate this:
Cancel
bogu -  ( Posted via: Dinamalar Android App )
01-அக்-202221:17:17 IST Report Abuse
bogu இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை எந்த ஒரு காங்கிரஸ் காரனுக்கும் இந்தியாவைப் பற்றிய அறிவு பூஜ்ஜியம் தான்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-அக்-202207:28:13 IST Report Abuse
Kasimani Baskaran தரூர் ஒரு பாக்கிஸ்தான் விசுவாசி. பழைய ஜோடியின் ஏறாளமான சொத்துக்கள் அங்கிருக்கிறது. அதானால்த்தான் இப்படி வேண்டுமென்றே ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X