வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு ஏழு பேர் 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடம் 

Added : செப் 30, 2022 | |
Advertisement
கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் நேற்று வெளியான நிலையில், ஏழு மாணவர்கள், 200க்கு, 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தனர்.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 12 பி.எஸ்சி., பாடப்பிரிவுகள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு, 6,980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கென, கடந்த ஜூன் 28 முதல் ஆக., 20 வரை 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந் நிலையில்,
வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு ஏழு பேர் 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடம் 

கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் நேற்று வெளியான நிலையில், ஏழு மாணவர்கள், 200க்கு, 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தனர்.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 12 பி.எஸ்சி., பாடப்பிரிவுகள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு, 6,980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கென, கடந்த ஜூன் 28 முதல் ஆக., 20 வரை 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந் நிலையில், பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி நேற்று, தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.


தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:அரசு வேளாண் கல்லுாரிகளில் ஒற்றை சாளர முறையில், 2,567 இடங்கள் நிரப்பப்படுகின்றன.இணைப்புக் கல்லுாரிகளில், அரசு இட ஒதுக்கீட்டில் ஒற்றை சாளர முறையில், 2,868 இடங்கள், நிர்வாக இட ஒதுக்கீட்டில், 1,545 இடங்கள் என, மொத்தம், 4,413 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.இதில், தொழிற்கல்வி, 247, மாற்றுத்திறனாளிகளுக்கு, 120, அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கு, 408, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கு தலா, 20 இடங்களும் அடங்கும்.


இவற்றுக்காக, 39 ஆயிரத்து 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 15 ஆயிரத்து 111 மாணவர்கள், 24 ஆயிரத்து 378 மாணவியர் அடங்குவர்.தரவரிசைப் பட்டியலில், ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த தலா இருவர், சேலம், ராமநாதபுரம், தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என, ஏழு பேர், 200க்கு, 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.


இதற்கு அடுத்தபடியாக, 14 பேர், 199.5 மதிப்பெண்கள்; 24 பேர் 199 மதிப்பெண்களை எடுத்துள்ளனர். 195 மதிப்பெண்களுக்கு மேல், 513 பேர் பெற்றுள்ளனர். கடந்தாண்டு, 161 பேர், 195 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தனர்.கடந்தாண்டு அரசு கல்லுாரிகளுக்கு 'கட் ஆப்' 185.5, தனியார் கல்லுாரிகளுக்கு 179, தொழில்நுட்ப பாடப்பிரிவுகளுக்கு சராசரியாக 181 மதிப்பெண் வரை 'கட் ஆப்' இருந்தது.


தமிழ் வழிக் கல்வியில், நடப்பாண்டு இரு பிரிவுகளில் தலா 10 இடங்கள் அதிகரிக்கப்பட்டு, 50 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளன. மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கவுன்சிலிங் முடிந்த பிறகே வேளாண் படிப்புக்கான கவுன்சிலிங் துவங்கும். 'ஆன்லைன்' முறையில் கவுன்சிலிங் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X