சென்னை:தமிழக, 'டாஸ்மாக் பார்' உரிமையாளர் சங்கத்தினர், தலைமை செயலர், உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:தற்போதைய அசாதாரண சூழலில், தொடர்ந்து அரசு மதுக்கடைகள், எங்கள் கட்டடங்களில் நடத்துவதற்கு விருப்பமில்லை.எங்கள் கட்டடங்களையும், பார்களையும் தடையில்லா சான்று இல்லாமல் அபகரிக்க, கடை நடத்துபவர்கள் முயல்கின்றனர்.
எங்கள் கட்டடங்களில் இயங்கி வரும் மதுக் கடைகளை உடனே மூடி, கட்டடத்தை திரும்ப ஒப்படைக்க 'டாஸ்மாக்' அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.மேலும், பார் ஏலத்தில் நடந்த முறைகேட்டை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், இன்று பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.