பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

Added : செப் 30, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் ஊட்டச்சத்து மற்றும் திட்ட உணவியல் துறை, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், உணவுப் பாதுகாப்புத்துறை, கல்லூரிக் கல்வி இணை இயக்குனரகம், மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், ஆகியன இணைந்து 'போஸான் அபியான் திட்டத்தின் சார்பில்' தேசிய ஊட்டச்சத்து மாதத்தைக் கொண்டாடும் வகையில் ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய உணவுக்
 பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் ஊட்டச்சத்து மற்றும் திட்ட உணவியல் துறை, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், உணவுப் பாதுகாப்புத்துறை, கல்லூரிக் கல்வி இணை இயக்குனரகம், மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், ஆகியன இணைந்து 'போஸான் அபியான் திட்டத்தின் சார்பில்' தேசிய ஊட்டச்சத்து மாதத்தைக் கொண்டாடும் வகையில் ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய உணவுக் கண்காட்சித் திருவிழாவை இன்று திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வைத்து நடத்தின. நிகழ்ச்சியில் துறைத் தலைவர் ஏஞ்சல் மேரி அனைவரையும் வரவேற்றார்.


கல்லூரி முதல்வர் முனைவர்சே. மு. அப்துல்காதர் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.ஏ. செய்யது முகமது காஜா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா அவர்கள் சிறப்புரையாற்றினார்.


ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக பல்வேறு வகையான பாரம்பரிய உணவுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் பாப்பாகுடி மானூர் சேரன்மகாதேவி களக்காடு நாங்குநேரி வள்ளியூர் ராதாபுரம் பாளை., ஆகிய ஊர்களில் இருந்து அங்கன்வாடி குழுவினர் வருகை தந்து பல்வேறு வகையான பாரம்பரிய உணவுகளைக் கண்காட்சிக்கு வைத்திருந்தனர்.


மேலும் பாரம்பரிய உணவு பற்றிய போட்டிகள் நடைபெற்றன. அப்போட்டிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகள் கலந்து கொண்டன. முதல் பரிசை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியும், இரண்டாவது பரிசை வள்ளியூர் பெட் கலை அறிவியல் கல்லூரியும், மூன்றாவது பரிசை சாரதா கல்லூரியும் பெற்றன.


பேராசிரியர் பிரசாத் நன்றி கூறினார். பேராசிரியர் அருணா சுந்தரி, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சசி தீபா, உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம், டைட்டஸ் கிருஷ்ணன், செல்லப்பாண்டி , ராமசுப்பிரமணியன், சங்கரநாராயணன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர் நிகழ்ச்சியில் திரளான மாணவ- மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் அங்கன்வாடி மையத்தினர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
30-செப்-202220:10:47 IST Report Abuse
அசோக்ராஜ் அவுங்களுக்கு ஏது பாரம்பர்யம்? இங்கன வெட்டு. அங்கன கொல்லு. அம்புட்டுதேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X