விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு நிறைவு மனித முகம், பறவை தலை கண்டெடுப்பு

Added : செப் 30, 2022 | |
Advertisement
சிவகாசி:விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் அகழாய்வின் முதற்கட்ட பணிகள் முடிந்தன. கடைசி நாளான நேற்று முன்தினம் சுடுமண்ணால் ஆன மனித முகம், பறவை தலை கண்டெடுக்கப்பட்டன.தமிழகத்தில் கீழடி, கங்கைகொண்ட சோழபுரம், ஆதிச்சநல்லுார், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பணி நடக்கிறது. விஜயகரிசல்குளத்தில், 3,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த
விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு நிறைவு மனித முகம், பறவை தலை கண்டெடுப்பு

சிவகாசி:விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் அகழாய்வின் முதற்கட்ட பணிகள் முடிந்தன. கடைசி நாளான நேற்று முன்தினம் சுடுமண்ணால் ஆன மனித முகம், பறவை தலை கண்டெடுக்கப்பட்டன.


தமிழகத்தில் கீழடி, கங்கைகொண்ட சோழபுரம், ஆதிச்சநல்லுார், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பணி நடக்கிறது. விஜயகரிசல்குளத்தில், 3,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள், இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.இதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, மார்ச் முதல் பணிகள் துவங்கின. மொத்தம், 16 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.


இதில், பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன விளையாட்டு வட்ட சில்லுகள், சங்கு வளையல்கள், பானை, அகல் விளக்கு, புகை பிடிப்பான் கருவி, யானை தந்தத்தால் ஆன அணிகலன் உள்ளிட்ட பல பொருட்கள் கிடைத்தன.சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில், வணிக முத்திரை, செப்பு நாணயம் கிடைத்தது.


சுடுமண்ணால் ஆன கற்களுடன் கூடிய சுவர் தென்பட்டது.முதற்கட்ட அகழாய்வானது நேற்றுடன் முடிந்தது. கடைசி நாளான நேற்று புதிதாக தோண்டப்பட்ட குழியில் சுடு மண்ணால் ஆன ஆண், பெண் முகம், பறவை தலை கண்டெடுக்கப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X