ஆம்புலன்சுக்கு வழிவிட்ட பிரதமர் : வைரலாகும் வீடியோ

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (43) | |
Advertisement
காந்திநகர்: ஆம்புலன்ஸ் வருவதை அறிந்து உடனடியாக தனது வாகனம் செல்லும் கான்வாயை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிடுமாறு உத்தரவிட்டார் பிரதமர் மோடி.இரு நாள் பயணமாக குஜராத் வந்திருந்த பிரதமர் மோடி, நேற்று தேசிய விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இன்று நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் 3வது வந்தே பாரத் ரயிலான காந்திநகர் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து
ஆம்புலன்ஸ்,பிரதமர் , கார், காந்திநகர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காந்திநகர்: ஆம்புலன்ஸ் வருவதை அறிந்து உடனடியாக தனது வாகனம் செல்லும் கான்வாயை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிடுமாறு உத்தரவிட்டார் பிரதமர் மோடி.

இரு நாள் பயணமாக குஜராத் வந்திருந்த பிரதமர் மோடி, நேற்று தேசிய விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இன்று நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் 3வது வந்தே பாரத் ரயிலான காந்திநகர் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

முன்னதாக ஆமதாபாத்திலிருந்து கார் மூலம் காந்திநகரில் உள்ள ராஜ்பவன் நோக்கி சென்றார். உடன் பாதுகாப்பு வாகனங்கள் முன்னே செல்ல பிரதமரின் வாகனம் ஆமதாபாத், காந்திநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.



latest tamil news


அப்போது பின்னால் ஆம்புலன்ஸ் வேகமாக வருவதையறிந்த மோடி தனது வாகனம் செல்லும் கான்வாயை நிறுத்த உத்தரவிட்டு, ஆம்புலன்ஸ் தடையின்றி செல்ல உதவினார். இதனை வேறு ஒரு காரில் பயணித்து வந்த பா.ஜ. பிரமுகர் ஒருவர் பிரதமர் வாகனம் ஆம்புலன்சுக்கு வழிவிடும் காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தி்ல் வைரலாகி வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-அக்-202215:15:13 IST Report Abuse
பேசும் தமிழன் தஞசாவூர் பக்கத்தில் ஒரு அமைச்சர் வரும்போது.... அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி வைத்து.... அவர் போன பின்பு அனுப்பி வைத்தனர்..... அந்த வீடியோ இணையத்தில் பார்த்தேன்
Rate this:
Cancel
Yogeshananda - Erode,இந்தியா
01-அக்-202209:41:36 IST Report Abuse
Yogeshananda இது தான் தேச பக்தன்....திராவிட மாடல் எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியும்...
Rate this:
Cancel
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
01-அக்-202208:44:02 IST Report Abuse
HONDA இந்த நிகழ்ச்சி தானா நந்த மாதிரீ தெரியலயே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X