வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காந்திநகர்: ஆம்புலன்ஸ் வருவதை அறிந்து உடனடியாக தனது வாகனம் செல்லும் கான்வாயை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிடுமாறு உத்தரவிட்டார் பிரதமர் மோடி.
இரு நாள் பயணமாக குஜராத் வந்திருந்த பிரதமர் மோடி, நேற்று தேசிய விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இன்று நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் 3வது வந்தே பாரத் ரயிலான காந்திநகர் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக ஆமதாபாத்திலிருந்து கார் மூலம் காந்திநகரில் உள்ள ராஜ்பவன் நோக்கி சென்றார். உடன் பாதுகாப்பு வாகனங்கள் முன்னே செல்ல பிரதமரின் வாகனம் ஆமதாபாத், காந்திநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
![]()
|
அப்போது பின்னால் ஆம்புலன்ஸ் வேகமாக வருவதையறிந்த மோடி தனது வாகனம் செல்லும் கான்வாயை நிறுத்த உத்தரவிட்டு, ஆம்புலன்ஸ் தடையின்றி செல்ல உதவினார். இதனை வேறு ஒரு காரில் பயணித்து வந்த பா.ஜ. பிரமுகர் ஒருவர் பிரதமர் வாகனம் ஆம்புலன்சுக்கு வழிவிடும் காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தி்ல் வைரலாகி வருகிறது.