திமுக பேரணியால் நகரில் ஒரு மணி நேரம் போக்குவரத்து முடக்கம்: மாணவர்கள், பொதுமக்கள் அவதி

Added : செப் 30, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
மயிலாடுதுறை நகரில் திமுகவினர் பேரணி காரணமாக ஒரு மணி நேரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முக்கிய நான்கு ரோட்டில் போக்கு வரத்து முடங்கியதால்ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய திமுக மாவட்ட செயலாளராக பூம்புகார் எம்எல்ஏ. நிவேதா எம் முருகனை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இன்று திமுக
 திமுக பேரணியால் நகரில் ஒரு மணி நேரம் போக்குவரத்து முடக்கம்: மாணவர்கள், பொதுமக்கள் அவதி

மயிலாடுதுறை நகரில் திமுகவினர் பேரணி காரணமாக ஒரு மணி நேரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முக்கிய நான்கு ரோட்டில் போக்கு வரத்து முடங்கியதால்ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய திமுக மாவட்ட செயலாளராக பூம்புகார் எம்எல்ஏ. நிவேதா எம் முருகனை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இன்று திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகள் அனைவரும் மயிலாடுதுறை கச்சேரி ரோட்டில் அமைந்துள்ள திமுக அலுவலகமான பகுத்தறிவு மன்றத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர்.


ஒரே நேரத்தில் எந்தவித அனுமதி, முன்னறிவிப்பு இன்றி நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்றதால் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளிவரும் பாதை, கச்சேரி சாலை காந்திஜிரோடு, மணிக்கூண்டு ரோடு ஆகிய சாலைகளில் போக்குவரத்து மொத்தமாக முடங்கியது. வாகனங்களில் செல்வோர் பெரும் அவதிக்கு ஆளாயினர்.


பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் வெளியே வர முடியாத காரணத்தால் பள்ளி முடிந்து வீடு திரும்ப வேண்டிய மாணவ, மாணவிகள் ஒரு மணி நேரம் பஸ் ஸ்டாண்டிலேயே காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். முக்கிய சாலைகளை கடந்து அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதால் அப்பகுதி வழியே சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் சைரன் ஒலித்தபடி நின்றிருந்தது.


விலை மதிக்க முடியாத உயிர்களை காப்பாற்ற வேண்டிய ஆம்புலன்ஸ் டிரைவர் செய்வது அறியாத தவித்த நிலையில் போலீஸ் உதவியுடன் ஆம்புலன்ஸ் கூட்டத்தைக் கடந்து சென்றது. போதிய போலீசார் பாதுகாப்பில்லாத காரணத்தால் யாரையும் கேள்வி கேட்க முடியாமல் செய்வதறியாது வெறுப்புடன் காத்துக் கிடந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-அக்-202213:34:43 IST Report Abuse
இந்திரன், முக்கியம்!
Rate this:
Cancel
01-அக்-202210:27:03 IST Report Abuse
பேசும் தமிழன் பேய் நாடாண்டால்..... பிணம் தின்னும் சாத்திரங்கள்.... இந்த இந்து விரோத கொடுங்கோல் ஆட்சி அதிக நாட்கள் நீடிக்காது .
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
01-அக்-202208:49:38 IST Report Abuse
sridhar திமுகவால் பொது மக்களுக்கு பல வகையில் அவதி . சனியன் , பீடை தொலையட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X