திருப்பூர்:பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோவையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலிலில், மூன்று ஏ.சி., பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில், பிரம்மோற்சவ விழா கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருப்பதி செல்லும் பக்தர்கள் வசதிக்காக, கோவையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில், மூன்று ஏ.சி., முன்பதிவு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவம் நடக்கும் நாட்களில், கூடுதலாக மூன்று பெட்டிகளுடன் சேர்த்து, 21 பெட்டிகளுடன் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கும் என, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பதுடன், புரட்டாசி மாதத்தின் அனைத்து நாட்களும் பக்தர் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், ரயில் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது; முன்பதிவு நடந்து வருகிறது' என்றனர்.