நீலகிரி மாவட்டம் குன்னுாரில், தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க, 129வது மாநாடு நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'தோட்ட பயிர்கள், என் பிரிவில் வராது. அதை பற்றி முழுமையாக பேசவில்லை. தற்போது, சமூக வலைதளங்கள் மற்றும் 'டிவி'க்களில், வெளிப்படை தன்மை என்ற பெயரில், பலர் கருத்து தெரிவிக்கின்றனர். 'எனக்கு எதிராக பேசினால், உடனடியான பதில் அளிக்கும் மனோபாவம் உள்ளது. அதனால் தான், பேட்டிகளை தவிர்க்கிறேன்; அரசியலில் ஒழுக்கம் தேவை' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'ஒரு காலத்துல கடுமையான விமர்சனத்துக்கு கூட, நாகரிகமாக பதில் சொன்ன அரசியல்வாதிகள் இருந்தாங்க... இப்பல்லாம் சர்ச்சை ஆகும்னு தெரிஞ்சே, நான்காம் தர பேச்சாளர்களை போல, உங்க கட்சியில சில அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும் பேசிக்கிட்டு இருக்காங்களே... அவங்களுக்கு நீங்க கொஞ்சம் வகுப்பெடுக்கலாமே...' என, முணுமுணுத்தபடி நகர்ந்தார்.