வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

Added : செப் 30, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
தொழில் நிறுவனங்கள் வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்., 30 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வருமான வரி இணையதளத்தில் பல பிரச்னைகள் எழுந்தன. இதன் காரணமாக காலக்கெடுவை நீட்டிக்க சார்ட்டட் அக்கவுன்டன்ட்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது அதனை ஏற்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அக்டோபர் 7க்கு காலக்கெடுவை மாற்றியுள்ளது.வருமான வரி செலுத்தும்
taxaudit, incometax, Extend_Due_Date_Immediately, வருமானவரி, வரிதாக்கல், வரி

தொழில் நிறுவனங்கள் வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்., 30 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வருமான வரி இணையதளத்தில் பல பிரச்னைகள் எழுந்தன. இதன் காரணமாக காலக்கெடுவை நீட்டிக்க சார்ட்டட் அக்கவுன்டன்ட்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது அதனை ஏற்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அக்டோபர் 7க்கு காலக்கெடுவை மாற்றியுள்ளது.

வருமான வரி செலுத்தும் நிறுவனங்கள் தங்கள் கணக்கினை சார்ட்டட் அக்கவுன்டன்ட் மூலம் தணிக்கை செய்ய வேண்டும். இந்த தணிக்கை பிரிவு 44பி-ன் கீழ் நடைபெறுகிறது. 2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையை செப்டம்பர் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நேரடி வரிகள் வாரியம் கூறியிருந்தது. தணிக்கை அறிக்கையை காலக்கெடுவுக்குள் உருவாக்காவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும். வருமான வரிச் சட்டம், 1961ன் பிரிவு 271பி-ன் படி, தாமதத்திற்கு மொத்த விற்பனை, வருவாய் அல்லது மொத்த வணிக ரசீதுகளில் 0.5 சதவீதம் அல்லது ரூ.1.5 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம்.

இந்நிலையில் வருமான வரி இணையதளம் செயல்படவில்லை என்று பயனர்கள் சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற ஹாஷ்டேகை டிரெண்டாக்கினர். இணையதளம் சரியாக வேலை செய்வதாக கூறிய வருமான வரித்துறை, பிரவுசர் கேச்சியை அழித்துவிட்டு, படிவத்தை மீண்டும் தொடருமாறு கேட்டுக்கொண்டது. அப்படி எழுந்த சில பிரச்னைகளை வருமான வரித்துறை சரி செய்வதாக கூறியது.

இந்நிலையில் கடைசி தேதியான செப்., 30 அன்று மாலை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் மற்றும் பிறர் பிரச்னைகளை எதிர்கொண்டதை கவனத்தில் ஏற்று 2022 - 23 மதிப்பீட்டு ஆண்டிற்கான பல்வேறு தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 7 வரை நீட்டித்துள்ளோம். இவ்வாறு கூறியுள்ளது. இந்த முடிவுக்காக வருமான வரித்துறைக்கு சார்ட்டட் அக்கவுன்டன்ட்கள் நன்றி கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X