திருத்தணி சார் - -பதிவாளர் அலுவலகத்தில்போலி பத்திரப்பதிவு: இருவர் சிக்கினர்

Added : செப் 30, 2022 | |
Advertisement
திருத்தணி:திருத்தணி பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சார் - -பதிவாளர் அலுவலகத்திற்கு, சூர்யநகரம் ஊராட்சிக்குட்பட்ட, சொத்து சர்வே எண்: 251/1ல், 0.97 சென்ட் நிலம் பத்திரப்பதிவு செய்வதற்கு, சீனிவாச ஆச்சாரி என்ற பெயரில் ஒருவர், பத்திரப்பதிவு ஆவணங்களான பட்டா, சிட்டா மற்றும் ஆதார் கார்டுடன் வந்தார். சார் - -பதிவாளர் அஸ்வினி, பதிவு செய்ய வந்த நபரிடம், உங்கள் தந்தை பெயர், எந்த ஊர் என
திருத்தணி சார் - -பதிவாளர் அலுவலகத்தில்போலி பத்திரப்பதிவு: இருவர் சிக்கினர்

திருத்தணி:திருத்தணி பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சார் - -பதிவாளர் அலுவலகத்திற்கு, சூர்யநகரம் ஊராட்சிக்குட்பட்ட, சொத்து சர்வே எண்: 251/1ல், 0.97 சென்ட் நிலம் பத்திரப்பதிவு செய்வதற்கு, சீனிவாச ஆச்சாரி என்ற பெயரில் ஒருவர், பத்திரப்பதிவு ஆவணங்களான பட்டா, சிட்டா மற்றும் ஆதார் கார்டுடன் வந்தார்.

சார் - -பதிவாளர் அஸ்வினி, பதிவு செய்ய வந்த நபரிடம், உங்கள் தந்தை பெயர், எந்த ஊர் என கேட்டார். அதற்கு பதில் சொல்வதற்கு தயக்கம் காட்டினார். அப்போது, அவருடன் வந்த சரவணன் என்பவர், பதிவு செய்ய வந்த நபரின் காதில் ஏதோ கூறியபின், தந்தை பெயர், ஊர் பெயரை சார் - -பதிவாளரிடம் கூறினார்.


இதனால் சந்தேகம் அடைந்த சார் - -பதிவாளர் அஸ்வினி, உடனடியாக ஆதார் கார்டை வாங்கி பார்த்த போது, சீனிவாச ஆச்சாரி பெயர் இருந்தது. ஆனால், அவர் கைரேகை வைக்கும் போது பதிவாகவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த சார் -- பதிவாளர் அஸ்வினி, திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் மற்றும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சரவணன், மற்றும் பதிவு செய்ய வந்த நபர் ஆகியோரை பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.


விசாரணையில், பத்திரப்பதிவு செய்ய வந்தவர் ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா சைனபுரம் கிராமத்தைச் சேர்ந்த மோகன், 50, என்பதும், உடன் வந்தவர், திருத்தணி அடுத்த காசிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன், 36, என்பதும் தெரிந்தது.


மேலும், சூர்யநகரத்தில் சீனிவாச ஆச்சாரி பெயரில், 0.97 சென்ட் நிலம் இருந்ததை அறிந்த இருவரும், போலியான ஆதார் கார்டு தயாரித்து, சூர்யநகரம் ஊராட்சி தெக்களூர் பகுதியை சேர்ந்த பாரதி என்பவருக்கு விற்பதற்கு திட்டமிட்டு, நேற்று பத்திரப்பதிவு செய்ய முயன்றனர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, போலீசார் இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X